ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சூரியகுமார் அடிக்க தொடங்கியவுடன் எனக்கு பெவிலியனிலிருந்து சிக்னல் வந்தது- கோலி

சூரியகுமார் அடிக்க தொடங்கியவுடன் எனக்கு பெவிலியனிலிருந்து சிக்னல் வந்தது- கோலி

விராத் கோலி

விராத் கோலி

சூர்யா அப்படி அடிக்க ஆரம்பித்ததும், நான் ஓய்வறையைப் பார்த்தேன். ரோஹித் மற்றும் ராகுல் பாய் இருவரும் என்னிடம் சொன்னார்கள், 'நீங்கள் தொடர்ந்து பேட்டிங் செய்யுங்கள், அவர் அடிப்பார்' - விராத் கோலி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஹைதராபாத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை த்ரில்லிங்காக வெற்றி கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது, ஆனால் முன்னதாக சூரியகுமார் யாதவ் சில பிரமிப்பூட்டும் ஷாட்களை ஆட விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து துரிதகதியில் சதக்கூட்டணி அமைத்தனர்.

  இது “எனது அனுபவத்தைப் பயன்படுத்துவது”, என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடர் வெற்றியின் முடிவில் கோலி  கூறினார், மேலும் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோரிடமிருந்து நான் கொஞ்சம் நிதானித்து ஆட சிக்னல் கிடைத்தது என்றார் விராட் கோலி.

  இது தொடர்பாக விராட் கோலி கூறியதாவது:

  “சூர்யா அப்படி அடிக்க ஆரம்பித்ததும், நான் ஓய்வறையைப் பார்த்தேன். ரோஹித் மற்றும் ராகுல் பாய் இருவரும் என்னிடம் சொன்னார்கள், 'நீங்கள் தொடர்ந்து பேட்டிங் செய்யுங்கள், அவர் அடிப்பார்' ஏனெனில் சூர்யா நன்றாக அடித்தார். இது ஒரு கூட்டாண்மையை உருவாக்கும் தருணம், எனவே எனது அனுபவத்தை சிறிது சிறிதாக பயன்படுத்தினேன், கொஞ்சம் ஆக்ரோஷத்தில் பின்வாங்கினேன்.

  "சூரியகுமார் யாதவ் அவுட் ஆனவுடன் நான் முதல் இரண்டு பந்துகளில் அடிக்க முடிவெடுத்தேன். பாட் கம்மின்ஸ் பந்தில் சிக்ஸர் அடித்தேன், அது மீண்டும் என்னை செட்-ஆகச் செய்தது அதனால்தான் நான் 3ம் நிலையில் இறங்கி  பேட்டிங் செய்கிறேன், எனது அனுபவத்தைப் பயன்படுத்தி அணிக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க 3ம் நிலையில் இறங்குவதுதான் சரியாக இருக்கும் " என்று கோலி கூறினார்.

  இதையும் படிங்க: இங்கிலாந்தை விட 7 புள்ளிகள் அதிகம்: ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்

  மேலும் கடந்த போட்டியில் ஆடம் ஸாம்ப்பாவை பவுண்டரிக்கு பிறகு சிக்சர் அடிக்காமல் 2 ரன்களுக்குப் பார்த்து ஆட்டமிழந்தேன் இது ஏமாற்றமாக இருந்தது, எனவே அவரை இந்தப் போட்டியில் அடித்து ஆடுவது என்று முடிவெடுத்தேன் என்ற கோலி கடைசி வரை ஆட்டம் செல்லக்கூடாது முன்னமேயே முடித்து விட வேண்டும் என்றார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Cricket, Virat Kohli