• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சின் மகன் அர்ஜுன் என்று என்னை நினைத்த தருணம்: சுரேஷ் ரெய்னா பகிரும் ருசிகரம்

சச்சின் மகன் அர்ஜுன் என்று என்னை நினைத்த தருணம்: சுரேஷ் ரெய்னா பகிரும் ருசிகரம்

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

தன் சுயசரிதை நூலான 'Believe'-ல் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கராக தன்னை நினைத்த ருசிகர சம்பவம் ஒன்றை விவரித்துள்ளார்.

  • Share this:
    தன் சுயசரிதை நூலான 'Believe'-ல் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கராக தன்னை நினைத்த ருசிகர சம்பவம் ஒன்றை விவரித்துள்ளார்.

    “Believe: What Life and Cricket Taught Me”, என்ற சுயசரிதை நூலில் 2006ம் ஆண்டு நடந்த அந்தச் சம்பவத்தைத்தான் விவரித்துள்ளார்.

    விமானத்தில் இந்திய வீரர்கள் பிசினஸ் கிளாஸில் அமர்ந்திருந்தனர். அப்போது ஏர் ஹோஸ்டஸ் சச்சின் டெண்டுல்கரிட்டம் ஆட்டோகிராப் வாங்க வந்தார். அப்போது அருகில் இருந்த என்னைப் பார்த்து அந்த பணிப்பெண், “ஹை அர்ஜுன் ஹவ் ஆர் யு, ஹவ் இச் யுவர் மாம்” என்றார் நான் இடையில் புகுந்து நான் அர்ஜுன் இல்லை என்று கூற நினைத்த போது சச்சின் டெண்டுல்கர் கொஞ்சம் விளையாட்டைத் தொடங்கினார்.

    இதையும் படிங்க: இங்கிலாந்து கிரேட் எஸ்கேப்: துரதிர்ஷ்ட ட்ரா குறித்து கோலி என்ன கூறுகிறார்?

    அதாவது அர்ஜுன், அம்மா எல்லாம் நலம்தான் ஆனால் அர்ஜுன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று அஞ்சலி கவலைப்படுகிறார், என்று விளையாட்டைத் தொடர்ந்தார்.

    பிற்பாடுதான் அந்த ஏர் ஹோஸ்டஸ் நான் அர்ஜுன் அல்ல ரெய்னா என்பதை உணர்ந்து படங்கள் எடுத்துக் கொண்டார், என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.

    Also Read: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

    இவ்வாறு ஒரு சுவாரசியமான சம்பவத்தை ரெய்னா தன் சுயசரிதை நூலில் விவரித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே டோக்கியோ ஒலிம்ப்பிக் மெடல் வென்றவர்களுக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசுகளை அறிவித்துள்ளது. தடகளத்தில் முதன் முதலாக தங்கப்பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி அறிவித்துள்ளது.

    ரவி தாகியா, மீராபாய் சானு ஆகியோருக்கு ரூ.50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: