Sachin Tendulkar: சுனில் கவாஸ்கரின் உலக சாதனையை முறியடித்த சச்சினுக்கு தங்க கைக்கடிகாரம் பரிசு - சுவாரஸ்ய நினைவலைகள்!

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு எதிரான போட்டியில் 35வது சதத்தை அடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் கண்ட வீரர்கள் வரிசையில் சுனில் கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தார்.

  • Share this:
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவனாக திகழ்ந்தவர் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். 1928 முதல் 1948 வரை கிரிக்கெட் விளையாடிய அவர் என்னற்ற சாதனைகளை படைத்திருக்கிறர். அதில் ஒன்று தான் அதிக டெஸ்ட் சதங்கள் என்ற உலக சாதனை. டான் பிராட்மேன் தனது கிரிக்கெட் கேரியரில் 29 சதங்கள் அடித்திருந்தார். அவருக்கு பின்னர் பல ஆண்டுகளாக எந்தவொரு வீரராலும் பிராட்மேனின் சாதனையை தகர்க்க முடியாமல் இருந்து வந்தது. ஆனால் 38 ஆண்டுகளுக்கு பின்னர் 1986-ம் ஆண்டு இந்தியாவின் சுனில் கவாஸ்கர் பிராட்மேனின் சாதனையை தகர்த்தார். அவர் தனது செஞ்சுரிகளின் எண்ணிக்கையை 34 ஆக உயர்த்தினார்.

சுனில் கவாஸ்கர்


சுனில் கவாஸ்கரின் சாதனையை அவருக்கு பின்னர் ஜாம்பவனாக மாறிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 2005-ன் ஆண்டு டிசம்பர் 10 அன்று முறியடித்தார். டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் (தற்போது அருண் ஜெய்ட்லி ஸ்டேடியம்) இலங்கைக்கு எதிரான போட்டியில் 35வது சதத்தை அடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் கண்ட வீரர்கள் வரிசையில் சுனில் கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தார்.

Also Read:  சச்சின் மகன் தோனியின் ஆசிரியர் பணி விண்ணப்பம்... ரசிகர்கள் குழப்பம்!

இலங்கைக்கு எதிரான அந்த 2வது டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் சச்சின் டெண்டுல்கர். போட்டிக்கு பின்னர் நிகழ்ச்சி வழங்குனர் அருண் லாலிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், “இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இதற்காக எனக்கு 16 ஆண்டுகள் தேவைப்பட்டது. இதற்கு முன்னர் இப்படியொரு உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை. இது மிகவும் அர்ப்புதமான தருணம் என்று சச்சின் அப்போது பேசினார்.

Also Read:    விலையுயர்ந்த பங்களாவை நஷ்டத்துக்கு விற்பனை செய்த ரோகித் சர்மா..! காரணம் என்ன?

இதன் பின்னர் கவாஸ்கரின் உலக சாதனையை தகர்த்ததற்காக சச்சின் டெண்டுல்கருக்கு தங்க கைக்கடிகாரம் ஒன்று பரிசாக தரப்பட்டது.

இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் கவாஸ்கரின் உலக சாதனையை சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னரே சமன் செய்திருந்தார். 2004ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 34வது சதம் அடித்த சச்சின், கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார். ஆயினும் ஒராண்டுக்கு பின்னர் அதே தேதியில் தான் கவாஸ்கரின் சாதனையை சச்சின் முறியடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் தற்போதும் சச்சின் டெண்டுல்கரே முதல் இடத்தில் தொடர்கிறார். 2013ம் ஆண்டுடன் ஓய்வு பெற்ற சச்சின் மொத்தமாக 51 சதங்கள் எடுத்துள்ளார். 45 சதங்களுடன் தென் ஆப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் 2ம் இடத்தில் உள்ளார். தற்போதைய விரர்களில் விராட் கோலி அதிகபட்சமாக 27 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார்.
Published by:Arun
First published: