ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்புவது எப்போது? புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்புவது எப்போது? புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

விபத்தின்போது மூட்டில் படுகாயம் அடைந்த ரிஷப பந்த்திற்கு 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  கடந்த மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து காரில் தனி நபராக, ரிஷப் பந்த் உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு வந்துள்ளார். அதிகாலையில் அவர் வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானது இதில் படுகாயம் அடைந்த அவர், அரியானா அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப பந்த்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதையடுத்து, விமானம் மூலமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.  தற்போதைய சூழலில் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரிஷப் பந்தின் வெற்றிடம் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், 3 ஃபார்மேட்டுகளிலும் ரிஷப் பந்த் அற்புதமான ஆட்டத்தை பெல முறை வெளிப்படுத்தியுள்ளார்.

விபத்தின்போது மூட்டில் படுகாயம் அடைந்த ரிஷப பந்த்திற்கு 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றில் 2 ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அடுத்ததாக 6 வாரங்கள் கழித்து மேலும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியுள்ளது.

‘ஆளுமை மிக்கவர் விராட் கோலி….’ – பாராட்டித் தள்ளும் சி.எஸ்.கே. ஆல்ரவுண்டர்…

இந்நிலையில் 2023-ஆம் ஆண்டின் பெரும்பாலான ஆட்டங்களில் ரிஷப் பந்த் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் இடம்பெறுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Cricket