ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

VIDEO: 2012-ல் அஸ்வின் செய்த ‘மான்கட்’ அவுட்... சேவாக், சச்சின் என்ன செய்தார்கள் தெரியுமா?

VIDEO: 2012-ல் அஸ்வின் செய்த ‘மான்கட்’ அவுட்... சேவாக், சச்சின் என்ன செய்தார்கள் தெரியுமா?

2012- அஸ்வின் செய்த மான்கட்.

2012- அஸ்வின் செய்த மான்கட்.

2012 - Sri Lankan batsman #mankaded By #Ashwin, here's what #Sachin and #Sehwag did next | அஸ்வின் செய்த மான்கட் அவுட், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  2012-ல் இலங்கை அணிக்கு எதிராக போட்டியில் அஸ்வின் மான்கட் அவுட் செய்ய, அப்போதைய கேப்டன் சேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் செய்த காரியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

  ஜெய்ப்பூரில் நடந்த 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில், அஸ்வின் பந்துவீசும்போது நான் ஸ்ட்ரைக்கர் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றதால், பந்துவீசுவதை பாதியில் நிறுத்திய அஸ்வின் ரன் அவுட் செய்தார்.

  Ashwin Mankad, Jos Buttler
  பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின். (IPL)

  அஸ்வின் செய்த மான்கட் அவுட், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது.

  ஐசிசி விதிமுறைப்படி அஸ்வின் செய்தது அவுட்தான் என்றாலும், ஒரு முறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

  இந்நிலையில், 2012-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்,  எதிரணியின் பேட்ஸ்மேன் திரிமன்னேவை ‘மான்கட்’ முறையில் அவுட்டாக்கினார்.

  ஆனால், அப்போதையை கேப்டன் வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை செய்து அவுட் கொடுக்க வேண்டாம் என்றும், தொடர்ந்து திரிமன்னேவை பேட்டிங் செய்யட்டும் என்றும் நடுவரிடம் கேட்டுக்கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  அற்பமான அவுட்டால் போட்டியின் தன்மை கெட்டுவிடக் கூடாது என்று நினைத்த கிரிக்கெட்  ஜாம்பவான்களின்  நல்லெண்ணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  மான்கட் என்ற வீரர் இந்த விக்கெட் எடுக்கும் முறையை கண்டுபிடித்ததால், அவரது பெயராலேயே இம்முறை அவுட்டுகள் அழைக்கப்படுகின்றன.

  அஸ்வின் செய்த அவுட்... எச்சரிக்கை விடுத்த கொல்கத்தா போலீஸ்!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published:

  Tags: IPL 2019, R Ashwin