தோனி புகழ் பாடும் பாகிஸ்தான் நடிகை!

தோனிக்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது.

Web Desk | news18
Updated: July 23, 2019, 4:34 PM IST
தோனி புகழ் பாடும் பாகிஸ்தான் நடிகை!
தோனி
Web Desk | news18
Updated: July 23, 2019, 4:34 PM IST
தோனியின் தீவிர ரசிகையாகிவிட்டேன் என்று அவரை புகழ்ந்து பாகிஸ்தான் நடிகை மதிரா முகமது பேசியுள்ளார்.

தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. தனது திறமையால் மட்டுமல்லாமல் நல்ல செயல்களாலும் பலரை தன்னுடைய ரசிகர்களாக மாற்றியவர் தோனி. அந்த லிஸ்டில் இப்போது புதிதாக இணைந்துள்ளார் பாகிஸ்தான் நடிகை மதிரா முகமது.

தோனி குறித்து பாகிஸ்தான் நடிகை மதிரா முகமது, ‘ 2008-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையின் போது இந்தியா, பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் நானும் தங்கியிருந்தேன். எனக்கு பிடித்த பாகிஸ்தான் வீரரிடம் ஆட்டோகிராப் வாங்க நினைத்து அவரிடம் சென்ற போது அவர் என்னை நிராகரித்தார். ஆனால் நான் சோகமாக இருந்த போது தோனி என்னிடம் வந்த போது என்னுடைய ஆட்டோகிராப் வேண்டுமா என்று கேட்டார். நானும் சந்தோஷமாக அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். மேலும் அவர் தன் இருக்கைக்கு அருகில் எனக்கு இடம் கொடுத்து என்னிடம் பேசினார். இதன் பிறகு அவருக்கு நான் தீவிர ரசிகையாகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.


தோனி விளையாட்டில் சில சமயங்களில் சிறப்பாக விளையாடாமல் தவறும் போதெல்லாம் விமர்சனங்களை எதிர்கொள்கிறார் என்றாலும், தோனிக்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் கூட தோனி சரியாக விளையாடவில்லை என்று கூறி அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும் ரசிகர்கள், முக்கிய பிரபலங்கள் உட்பட பலர் அவர் ஓய்வை அறிவிக்கக் கூடாது என்றும் கூறிவருகின்றனர்.

Also watch

Loading...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...