‘இன்று ரோகித் சர்மா உலக சாதனை படைப்பார்’: சொன்னது நடந்த தோனியின் ‘மாஸ்டர் மைன்ட்’கணிப்பு

ரோகித் சர்மா

நவம்பர் 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ‘ஹிட்மேன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ரோகித் சர்மா ஒருநாள் போட்டி ஒன்றில் 264 ரன்கள் விளாசி உலக சாதனை புரிந்தார். இந்த இன்னிங்ஸை தோனி முன் கூட்டியே கணித்து விட்டார்.

 • Share this:
  தோனி எப்போதும் மேட்ச் சூழ்நிலைகளைக் கணிப்பதில் வல்லவர், எதிரணி பேட்ஸ்மென் அடுத்த பந்தை சிக்சருக்கு முயற்சி செய்வார் என்பது முதல் சிங்கிள் எடுப்பார் என்பது வரை அவரது உடல் மொழியை வைத்தே கணித்து பவுலர்களை எச்சரிக்கும் அபார உள்ளுணர்வு கொண்டவர் எம்.எஸ்.தோனி.

  இப்படித்தான், 2014-ம் ஆண்டு கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடந்த 4வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஆக்ரோஷ மூடின் உச்சத்தில் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்டத்தைப் பார்த்த தோனி, இன்று ரோகித் சர்மா ஆட்டமிழக்கவில்லை எனில் நிச்சயம் 250 அடிப்பார் என்று உள்ளுணர்வுடன் கணித்தார்.

  அன்றுதான் ரோகித் சர்மா ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 264 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்தார். இலங்கை பவுலர்களின் பந்து வீச்சை மைதானம் முழுக்க சிதறடித்தார், அவரைக் கட்டுப்படுத்த முடியவேயில்லை.  இவர் போட்டு சாத்தி எடுக்க இந்தியா 404/5 என்ற ஸ்கோரை எட்டியது. கோலியும் 66 ரன்கள் விளாசினார். ரோகித் சர்மா சாதனை உடைக்கும் 33 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 264 ரன்கள் எடுத்தார். இதற்கு அவர் 173 பந்துகளையே சந்தித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இலங்கை அணி 251 ரன்களையே எடுத்தது, இந்திய அணீ 153 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

  ஆனால் இந்த இன்னிங்ஸை கணித்த தோனிக்கு விருது இல்லை. ரோகித் சர்மாதான் மேன் ஆஃப் த மேட்ச் விருது பெற்றார். சேவாக் எப்படி டெஸ்ட் போட்டிகளில் 2 முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரரோ அதே போல் ரோகித் சர்மா 3 இரட்டைச்சதங்களை ஒரு நாள் போட்டியில் அடித்த உலகின் ஒரே வீரர்.

  நவம்பர் 13, 2014 மாலை 5 மணிக்கு தோனி வெளியிட்ட ட்வீட்டில், “ரோகித் அவுட் ஆகவில்லை எனில் இன்று கண்டிப்பாக 250 அடிப்பார்” என்று பதிவிட்டது இன்று வரை மறக்க முடியாத ஒரு அபாரக் கணிப்பாகும்.
  Published by:Muthukumar
  First published: