• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Virat Kohli : விராட் கோலியை திகிலூட்டிய அந்த ஒரு ஓவர்.. காரணம் மகேந்திர சிங் தோனி தான்!

Virat Kohli : விராட் கோலியை திகிலூட்டிய அந்த ஒரு ஓவர்.. காரணம் மகேந்திர சிங் தோனி தான்!

தோனி - கோலி

தோனி - கோலி

கோலி தனது விக்கெட் கீப்பிங் அனுபவங்களை சமீபத்தில் சக வீரரான மயங்க் அகர்வாலுடன் பகிர்ந்திருக்கிறார்.

  • Share this:
கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் பணி என்பது சிறப்புவாய்ந்த ஒரு பணியாகும். களத்தில் விளையாடும் எல்லா வீரர்களாலும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட முடியாத அளவுக்கு கடினமான பணி அது.

ஆனால் கிரிக்கெட் போட்டிகளின் போது வழக்கமான விக்கெட் கீப்பருக்கு பதிலாக அபூர்வமாக சில நேரங்களில் பிற வீரர்கள் விக்கெட் கீப்பராக செயல்பட வைக்கப்பட்டிருக்கின்றனர். உலகின் தலைசிறந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் என பெயரெடுத்த முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு சமயம் களத்திலிருந்து சிறிது நேரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட போது அவருக்கு பதிலாக தற்போதைய கேப்டன் விராட் கோலி ஒரு ஓவருக்கு மட்டும் விக்கெட் கீப்பிங் பணியை செய்திருக்கிறார்.

விக்கெட் கீப்பிங் செய்த கோலி


2015ம் ஆண்டு வங்கதேசத்துடனான போட்டியின் போது இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போட்டியின் நடுவே தோனி திடீர் என இயற்கை உபாதையை கழிக்க செல்ல வேண்டியிருந்ததால் தனக்கு பதிலாக விராட் கோலியை கீப்பிங் செய்யுமாறு தன்னுடைய கிளவுஸுகளை அவரிடம் கழற்றிக் கொடுத்து விட்டு சென்றார் தோனி. பொதுவாக இது போன்ற நேரங்களில் மாற்று விக்கெட் கீப்பர் வெளியில் இருந்து அழைக்கப்படுவார்கள், இருப்பினும் அப்போது கள நடுவர்கள் மாற்று விக்கெட் கீப்பரை அனுமதிக்காததால் களத்தில் இருந்த கோலி விக்கெட் கீப்பிங் செய்ய நேரிட்டது. எனினும் களத்தில் கோலிக்கு பதிலாக மாற்று ஃபீல்டர் களமிறக்கப்பட்டார். ஒரு ஓவர் மட்டுமே விராட் கோலி கீப்பிங் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோலி தனது விக்கெட் கீப்பிங் அனுபவங்களை சமீபத்தில் சக வீரரான மயங்க் அகர்வாலுடன் பகிர்ந்திருக்கிறார்.

தான் விக்கெட் கீப்பிங் செய்த போது பந்து தன் முகத்தில் தாக்கி விடுமோ என பயந்ததாக தெரிவித்துள்ளார் விராட் கோலி.

மேலும், எம்.எஸ்.தோனி ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், விக்கெட் கீப்பிங்கின் பொறுப்பை ஏற்றுக்கொண்டபின் அதற்கேற்ப பீல்டிங்கை மாற்றி அமைக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டதாக கோலி கூறினார்.

அப்போது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அந்த ஓவரை வீசியதால், தன்னுடைய முகத்தில் பந்து தாக்கி விடுமோ என்ற பயமும் மிரட்டிக் கொண்டே இருந்தது எனவும் கோலி குறிப்பிட்டுள்ளார். விக்கெட் கீப்பிங் செய்த போது நான் ஹெல்மெட் அணிய விரும்பவில்லை, ஏனென்றால் நான் அவமதிக்கப்படுவேன் என்று உணர்ந்தேன் என உமேஷிடம் தெரிவித்ததாக கோலி கூறினார்.

கோலியின் கீப்பிங் அனுபவம்


Also Read:   Viral Video: விமான பணிப்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண்.. பற்கள் உடைப்பு.. காரணம் இது தான்!

ஆட்டத்தின் 44வது ஓவர் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்த கோலி, 45வது ஓவரின் போது தோனி களத்துக்கு திரும்பியதால் நிம்மதி அடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: