முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் தொடரில் பும்ரா இடம்பெறுவாரா? புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரில் பும்ரா இடம்பெறுவாரா? புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறுவது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்ன வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக கடந்த 2022 செப்டம்பர் மாதத்திலிருந்து எந்தவொரு சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர் களத்திற்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

தற்போதைய தகவலின்படி பும்ரா ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. பும்ராவுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் குணம் அடைய எதிர்பார்த்தை விட அதிக நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம். இதன் அடிப்படையில் மேலும் சில போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் பும்ரா கம் பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதிர்ச்சி தரும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்திய அணி எதிர்கொள்ளவுள்ள அடுத்த பெரிய போட்டியாக இந்த டெஸ்ட் இறுதியாட்டம் அமையவுள்ளது. இதில் பும்ரா இடம்பெற மாட்டார் என்று கூறப்படுவது இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில்தான் பும்ரா மீண்டும் விளையாடுவதற்கான சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

First published:

Tags: Cricket