முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய அணிக்கு பும்ரா திரும்புவது எப்போது? புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய அணிக்கு பும்ரா திரும்புவது எப்போது? புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

பும்ரா

பும்ரா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அணிக்கு திரும்புவது குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணியில் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக இருப்பர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதியில் இருந்து ஓய்வில் உள்ளார். இதையொட்டி அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. தற்போது உடல் நலம் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் அவர் எப்போது களத்திற்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பும்ரா அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர் இந்த டெஸ்ட் தொடர் முழுவதுமாக அணியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பும்ரா இடம்பெற வாய்ப்பில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த போட்டியில் பும்ரா விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அல்லது நேரடியாக அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பும்ரா முமபை அணிக்காக விளையாடி வருகிறார். பும்ரா இல்லாத சூழலில், முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், தீபக சாஹர் உள்ளிட்டோர் வேகப்பந்து வீச்சு யூனிட்டிற்கு பலம் சேர்த்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சுதான் அதிக ஆதிக்கம் செலுத்தியது. இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

First published:

Tags: Jasprit bumrah