இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் பக்கத்தில்கூட போகமாட்டேன்: சீக்ரெட் உடைத்த தோனி!

When #ImranTahir celebrates his wicket, I am not move: #Dhoni | தோனியின் பேச்சால் அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் பக்கத்தில்கூட போகமாட்டேன்: சீக்ரெட் உடைத்த தோனி!
எம்.எஸ்.தோனி - இம்ரான் தாஹிர்.
  • News18
  • Last Updated: May 2, 2019, 2:19 PM IST
  • Share this:
இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் நான் பக்கத்தில் கூட போகமாட்டேன் என கேப்டன் தோனி கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. பேட்டிங்கில் 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய தோனி, 2 அட்டகாசமான ஸ்டம்பிங்களை செய்தார். இதனால், தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


Dhoni man of the match awards, CSK, IPL
ஆட்டநாயகன் விருது பெற்ற தோனி. (BCCI)


போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய தோனி, “தல என்ற பெயரை பெற்றது மிகவும் சிறப்பானது. இது மிகப்பெரிய செல்லப் பெயர். முன்னதாக எங்களது அணிக்காக தயார் செய்யப்பட்ட முதல் பாடலில் தல என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. அப்போது எனக்கு புரியவில்லை. ஓராண்டுக்குப்பிறகுதான் நான் அதை புரிந்துகொண்டேன்” என நெகிழ்ச்சியாக கூறினார்.தொடர்ந்து இம்ரான் தாஹிர் குறித்து பேசிய அவர், “இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தவுடன் அவர் இருக்கும் இடத்தில் இருந்து அடுத்த முனைக்குச் சென்று கொண்டாடுவார் என தெரியும். நானும் வாட்சனும், காத்திருப்போம். நாங்கள் இருவரும் 100 சதவீதம் நல்ல உடல்நிலையைக் கொண்டவர்கள் இல்லை. அதனால் தாஹிர் தனது இடத்திற்கு வந்ததும் வாழ்த்துகள் கூறுவோம்” என நகைச்சுவையாக தெரிவித்தார்.தோனியின் பேச்சால் அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தங்க மகள் கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு!

ஹிட்மேனின் சாதனையை சமன் செய்த அயர்ன்மேன்... ஐ.பி.எல் வரலாற்றில் புதிய மைல்கல்!

VIDEO | ரசிகர்கள் என்னை ‘தல’ என்றுதான் அழைக்கிறார்கள்: தோனி நெகிழ்ச்சி!

ஸ்டம்பிங்கில் மரணமாஸ் காட்டிய தல தோனி... வைரலாகும் வீடியோ!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading