உன் மூஞ்சில ஓங்கி குத்திடுவேன்... ஜாக்கிரதை...! பார்திவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹைடன்

Partiv Patel | Mathew Hayden | சிஎஸ்கே அணியில் சிறந்த நண்பர்களாக மாறி விட்டோம்.

உன் மூஞ்சில ஓங்கி குத்திடுவேன்... ஜாக்கிரதை...! பார்திவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹைடன்
பார்த்திவ் படேல்
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியின் போது கேலி செய்ததால் கோபமடைந்த மேத்யூவ் ஹெய்டன் தன்னை மிரட்டியது குறித்து பார்த்திவ் படேல் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் உள்ளூர் போட்டிகள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல் தொடரில் பிசியாக இருக்க வேண்டிய இந்திய வீரர்கள் இணையத்தில் ஆக்டிவாக உள்ளனர்.

இந்திய வீரர் பார்த்திவ் படேல் ஹெய்டன் உடனான மோதல் குறித்து தற்போது பேசி உள்ளார். அப்போது, “நான் பிரிஸ்பன் போட்டியில் குளிர்பானங்களை எடுத்துச் சென்றேன். அந்த போட்டியின் முக்கியமான கட்டத்தில் ஹெய்டன் இர்ஃபான் பதான் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திருப்பி கொண்டிருந்தார்.


அப்போது நான் அவரை தாண்டி செல்லும் போது ஹூ ஹூ என்று சத்தம் எழுப்பி கேலி செய்தேன். அவர் என் மீது கடும் கோபத்தில் இருந்தார். நான் மீண்டும் டிரெஸ்ஸிங் ரூம்மிற்கு செல்லும் போது வாசலில் நின்றிருந்த ஹெய்டன் என்னை நோக்கி, இன்னொரு தடவை இப்படி நடந்து கொண்டால் செஞ்ச மூஞ்சில ஒங்கி குத்திடுவேன் என்றார்.

நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் பதில் கூறாமல் சென்று விட்டார். அப்போது என்னை அடிக்க பார்த்தார், ஆனால் அதன் பிறகு சிஎஸ்கே அணியில் சிறந்த நண்பர்களாக மாறி விட்டோம்'' என்றார் படேல்.

First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading