2012 ஐ.பி.எல் வரலாறு மீண்டும் திரும்புமா? இன்று டெல்லியை எதிர்கொள்ளும் சி.எஸ்.கே!

When #ChennaiSuperKingsfaced #DelhiDaredevils in #IPLQualifier2 | கடந்த 2012 ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் சென்னை, டெல்லி அனிகள் மோதின. #CSKvDC #DCvCSK

news18
Updated: May 10, 2019, 12:06 PM IST
2012 ஐ.பி.எல் வரலாறு மீண்டும் திரும்புமா? இன்று டெல்லியை எதிர்கொள்ளும் சி.எஸ்.கே!
தோனி - ஷ்ரேயாஸ் ஐயர். (IPL)
news18
Updated: May 10, 2019, 12:06 PM IST
2012 ஐ.பி.எல் குவாலிஃபயர் போட்டியில் நடந்தது மீண்டும் இன்று நடக்குமா என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

2-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

IPL, Mumbai Indians
சென்னையை வீழ்த்திய இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை. (BCCI)இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபயர் 2) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதேபோல், கடந்த 2012 ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் சென்னை, டெல்லி அனிகள் மோதின. அப்போதைய டெல்லி அணியில் சேவாக், வார்னர், ஜெயவர்தனே, ராஸ் டெய்லர், ஆண்ரே ரசல் என பலமான பேட்டிங் வரிசை இருந்தது.

DD vs CSK IPL 2012
டெல்லி vs சென்னை


Loading...

இந்தப் போட்டியில், முரளி விஜய் சதம் அடித்து அசத்த, சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. ஆனால், டெல்லி அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதேபோல், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்துமா? என சென்னை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

நோன்பு இருந்தபோதும் விளையாடிய ஐ.பி.எல் வீரர்கள்... சீக்ரெட் உடைத்த ஷிகர் தவான்!

#IPLQualifier2: வேட்டைக்குத் தயாராகும் கர்ஜிக்கும் சிங்கங்கள்!

VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!

இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...