எனது பொறுமையை இழந்தேன்; தோனியை கடுமையாக திட்டினேன் - நினைவு கூர்ந்த நெஹ்ரா

எனது பொறுமையை இழந்தேன்; தோனியை கடுமையாக திட்டினேன் - நினைவு கூர்ந்த நெஹ்ரா
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாள் நெஹ்ரா 2005-ம் நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் போது தோனி உடனான நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளின் போது களத்தில் இருக்கும் வீரர்கள் சகவீரர்களுடன் கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவது வழக்கமான ஒன்று தான். போட்டி முடிந்த பின் மனகசப்பை தவிர்த்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள். அதுப்போன்ற ஒரு நிகழ்வை தான் நெஹ்ரா தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

2005-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அஃப்ரிடி அடித்த பந்து தோனிக்கும் ஃபர்ஸ்ட் லிப்பில் இருந்த டிராவிட்டுக்கும் நடுவில் சென்றும்விடும். எளிய வாய்ப்பை தவறவிட்டதால் தோனியை கடுமையான சொற்கள் வசைபாடிய நெஹ்ரா டிராவிட்டையும் விட்டுவைக்கவில்லை.
இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு நெஹ்ரா அளித்த பேட்டியில், “இந்த போட்டி விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டி என்று நினைத்து இருந்தார்கள். ஆனால் எனக்கு நியாபகம் இருக்கிறது. அந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெற்ற 4வது போட்டியாகும்.

அஃப்ரிடியின் கேட்சை தவறவிட்டதற்காக தோனியை கடுமையாக சாடினேன். அதற்குமுன் நான் வீசிய பந்தில் அஃப்ரிடி சிக்சர் விளாசி இருந்தார். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே கொஞ்சம் அழுத்தம் அதிகமாக தான் இருக்கும். அதனால் அந்த கேட்சை தவறவிட்டதால் என் பொறுமையை இழந்து அவ்வாறு நடந்து கொண்டேன்.நான் அதுபோன்று நடந்து கொண்டதை நினைத்து பெருமைப்படவில்லை. ஆனால் இதுபோன்று உணர்ச்சிவசப்படுவது எனக்கு முதல்முறையல்ல. அந்த போட்டிக்கு பின் தோனி, டிராவிட் இருவருடனும் சகஜமாக தான் பேசி மகிழ்ந்தேன்“ என்றார்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
 
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading