Home /News /sports /

முதல் டி20 போட்டியில் என்ன சொதப்பினோம்: ரோஹித் சர்மா ஒப்புதல்

முதல் டி20 போட்டியில் என்ன சொதப்பினோம்: ரோஹித் சர்மா ஒப்புதல்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம், அதனால் 200 ரன்களுக்கும் மேல் எடுக்க முடிந்தது. எந்த இடத்தில் தவறாகிப் போனது என்பதைப் புரிந்து கொள்ள இந்த போட்டி எங்களுக்கு உதவியதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மொஹாலியில் ஆஸ்திரேலியாவிடம் முதல் டி20 போட்டியில் 208 ரன்களை வெற்றிகரமாக தடுக்க முடியாமல் இந்தியா அடைந்த தோல்விக்கு  காரணம் மோசமான பவுலிங்கும், மோசமான பீல்டிங்குமே என்று கேப்டன் ரோஹித் சர்மா ஒப்புக் கொண்டார். 

ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக டி20-யில் அதிகபட்ச ரன்களை விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறை, அதே போல் இவ்வளவு பெரிய இலக்கை 2வது முறையாக விரட்டி வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. தொடக்கத்தில் கேமரூன் கிரீன், ஏரோன் பிஞ்ச் பின்னி எடுக்க, முடிவில் மேத்யூ வேட், டிம் டேவிட் வெளுத்துக் கட்டி போட்டியை ஆஸ்திரேலியா வென்றது.

இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார் தன் வாழ்நாளில் முதல் முறையாக டி20-யில் 50 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்தார். ஹர்ஷல் படேல் காயத்திலிருந்து வந்து வீசுகிறார், ஆனால் இவரெல்லாம் ஒரு லிமிடெட் பவுலர்தான், இவரது ஸ்லோ பந்துகளை பார்த்து விட்டால் பந்து காணாமல் போய்விடும். இவரை நம்மூர் திவேத்தியாவே வெளுத்துக் கட்டியுள்ளார். இன்னொரு பெரிய கவலை யஜுவேந்திர செஹல் சாத்து வாங்குவதுதான். அனைத்தையும் விட பெரிய கவலை 3 கேட்ச்கள் ட்ராப், ஏகப்பட்ட மிஸ் பீல்டிங்குகள்.

இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா போட்டி முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்குக் கூறியதாவது:“நாங்கள் அவ்வளவு நன்றாக வீசவில்லை. 200 ரன்கள் வெற்றி பெற வேண்டிய ஸ்கோர், ஆனால் பீல்டிங்கில் வந்த வாய்ப்புகளை கோட்டை விட்டோம், இதுதான் காரணம்.

ஆனால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம், அதனால் 200 ரன்களுக்கும் மேல் எடுக்க முடிந்தது. எந்த இடத்தில் தவறாகிப் போனது என்பதைப் புரிந்து கொள்ள இந்த போட்டி எங்களுக்கு உதவியது. ஆகவே அடுத்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட முடியும். எங்களைப் பொறுத்தவரை வேட் அல்லது டிம் டேவிட் கூட்டணிதான் பெரிதாகப் பட்டது. ஒரு விக்கெட்டை விரைவில் வீழ்த்த முடியவில்லை.  இவர்கள் இருவரும் 32 பந்துகளி 60 ரன்கள் பக்கம் அடித்து விட்டனர்.  ஆஸ்திரேலியா பார்வையில் இது திருப்பு முனை.” இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

இதையும் படிங்க : ஐசிசி ரேங்கிங்கில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்

ஆனால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம், அதனால் 200 ரன்களுக்கும் மேல் எடுக்க முடிந்தது. எந்த இடத்தில் தவறாகிப் போனது என்பதைப் புரிந்து கொள்ள இந்த போட்டி எங்களுக்கு உதவியது. ஆகவே அடுத்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

எங்களைப் பொறுத்தவரை வேட் அல்லது டிம் டேவிட் கூட்டணிதான் பெரிதாகப் பட்டது. ஒரு விக்கெட்டை விரைவில் வீழ்த்த முடியவில்லை. இவர்கள் இருவரும் 32 பந்துகளி 60 ரன்கள் பக்கம் அடித்து விட்டனர்.  ஆஸ்திரேலியா பார்வையில் இது திருப்பு முனை.” இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.
Published by:Arunkumar A
First published:

Tags: India, India vs Australia, Rohit sharma

அடுத்த செய்தி