ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அசாம் டி20 போட்டிக்கு முன் CAA குறித்து விராட் கோலி கருத்து

அசாம் டி20 போட்டிக்கு முன் CAA குறித்து விராட் கோலி கருத்து

விராட் கோலி

விராட் கோலி

Virat Kohli | CAA | இந்த விவகாரத்தில் நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை - விராட் கோலி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கவுகாத்தியில் நாளை நடைபெற உள்ள டி20 போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

இந்தியா - இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை அசாமில் உள்ள கவுகாத்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களுக்கு பலத்த பாதுகபாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கவுகாத்தி டி20 போட்டிக்கு முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, “ குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முழு தெளிவு இல்லாமல் கருத்து தெரிவிப்பது தவறு. இந்த விவகாரத்தில் நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. இரு தரப்பினர்களுக்கும் இடையே தீவிரமான கருத்துகள் உள்ளன. இதுகுறித்து பேச வேண்டுமென்றால் முழு தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். அதன் அர்த்தம் என்ன, என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதன்பின் தான் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்“ என்றார்.

மேலும் கவுகாத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நகரம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் சாலைகளில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை என்றும் விராட் கோலி தெரிவித்தார்.

First published:

Tags: Cricket, Virat Kohli