• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணிக்கு எந்த இடம்?

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணிக்கு எந்த இடம்?

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

  • Share this:
    ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் இழந்தபோதும் 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது இந்தியா. இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தும் மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவும் நீடிக்கின்றன.

    பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும் இந்தியாவின் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் முதலிடம் பிடிக்க, 7-ஆம் இடத்தில் உள்ளார் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா. ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: