Home /News /sports /

கோலிக்கு என்னதான் வேண்டும்? அவரை பூஜிக்க வேண்டுமா?- கவாஸ்கர் காட்டம்

கோலிக்கு என்னதான் வேண்டும்? அவரை பூஜிக்க வேண்டுமா?- கவாஸ்கர் காட்டம்

கோலி - கவாஸ்கர்

கோலி - கவாஸ்கர்

கேப்டன்சி என்ற அத்தியாயம் முடிந்து போன அத்தியாயம். இப்போது கோலி ஒரு வீரர் அவ்வளவே கவாஸ்கர் காட்டம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India
  தான் டெஸ்ட் கேப்டன்சியை உதறிய போது எம்.எஸ்.தோனி தவிர வேறு எந்த சகவீரருமோ தன்னுடன் ஆடிய முன்னாள் வீரர்கள் யாருமோ தனக்கு மெசேஜ் செய்யவில்லை என்று தன் ஆதங்கத்தை விராட் கோலி வெளிப்படுத்த, அதன் மீதான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, சுனில் கவாஸ்கர் காட்டமாக கோலிக்குப் பதிலளித்துள்ளார்.

  எத்தனையோ வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட பிறகு விராட் கோலி பார்முக்கு வந்து விட்டதாகத் தெரிகிறது, டி20-யை வைத்து எதையும் கூற முடியாது, டெஸ்ட்டிங் கண்டிஷனில் டெஸ்ட் போட்டிகளில் பார்முக்கு வந்தால்தான் அவர் விராட் கோலி, டி20-யில் 30 அடித்தால் பார்ம் அவ்வளவுதான், டெஸ்ட்டில் 30-ல் அவுட் ஆனால் அது தோல்வி. எனவே இதை வைத்து கூற முடியாது என்பது ஒருபுறமிருக்க, இத்தனை வாய்ப்புகளை இதே விராட் கோலி மணீஷ் பாண்டேவுக்குக் கொடுத்தாரா, அல்லது கருண் நாயருக்குக் கொடுத்தாரா? அம்பதி ராயுடுவுக்குக் கொடுத்தாரா என்று கேள்வி எழுப்பினால் அவரால் முழிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

  இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இந்திய அணியை 181 ரன்கள் வரை கொண்டு செல்ல உதவினார், ஆனால் அரைசதம் அடிப்பதற்கு முன்னால் ஒரு 6 பந்து கடைசி ஓவரில் 4 பந்துகள் டாட் பால்களானதில் இந்திய ஸ்கோர் 195-196 போக வேண்டியது அல்லது குறைந்தது 191 ரன்களாவது வந்திருக்க வேண்டும், ஆனால் வரவில்லை தோற்றது இந்தியா. இந்த இன்னிங்ஸ் முடிந்தவுடன் தன் நேர்மையை விளம்பும் விதமாகவும் தான் கேப்டன்சியை உதறிய போது தோனிதான் தனக்கு மெசேஜ் செய்ததாகவும் மற்றவர்களுக்கு தன் நம்பர் தெரிந்திருந்தும் ஒரு மெசேஜ் கூட இல்லை என்றும் ஆதங்கப்பட்டிருந்தார்.

  Also Read:  கெட்டதைப் பார்க்காதீர்கள், கெட்டதைக் கேட்காதீர்கள் அர்ஷ்தீப்: ‘ட்ரோல்’ பேர்வழிகளை அலறவிட்ட ஷமி

  அவரது இந்தக் கருத்தை சாடிய சுனில் கவாஸ்கர் கூறும்போது, “விராட் கோலி யாரை நோக்கி இதைக் கூறினார் என்று கூறுவது கடினம். அவர் பெயர் குறிப்பிட்டிருந்தால் அவரிடம் போய் நீங்கள் கோலியை தொடர்பு கொண்டீர்களா இல்லையா என்று கேட்கலாம். அவர் எம்.எஸ்.தோனி பற்றி குறிப்பிட்டதாகவே தெரிகின்றது.
  இவருடன் விளையாடிய முன்னாள் வீரர்கள் என்றால் நிறைய பேர் தொலைக்காட்சியில் வருகின்றனர்.

  அவர் பெயரைக் குறிப்பிட்டு பேச வேண்டும். அவரிடமே ப்ரோ நீங்கள் எனக்கு மெசேஜ் செய்யவில்லையே என்று கோலியே கேட்கலாமே.  என்னதான் வேண்டுமாம் இந்தக் கோலிக்கு, என்ன மெசேஜை எதிர்பார்க்கிறார் அவர்? அவரை ஊக்குவிக்க வேண்டுமா? பூஜிக்க வேண்டுமா? என்ன எதிர்பார்க்கிறார். கேப்டன்சி என்ற அத்தியாயம் முடிந்து போன அத்தியாயம். இப்போது ஒரு வீரர் அவ்வளவே. கேப்டனாக இருக்கும் போது மற்ற வீரர்களைப் பற்றி கவலைப்பட வேண்டும், இப்போது என்ன? உன் கேமில் கவனம் செலுத்த வேண்டியதுதானே.

  Also Read:  ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்

  நான் 1985-ல் கேப்டன்சியை விட்டு விலகினேன். அதாவது பென்சன் அண்ட் ஹெட்ஜஸில் சாம்பியன்களான பிறகு கேப்டன்சியை விட்டு விலகினேன். அன்றைய இரவு நாங்கள் ஒருவரையொரு ஆரத்தழுவினோம், வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டோம், விருந்தில் கொண்டாடினோம். இதை விட வேறு என்ன வேண்டும், வேறு என்ன எதிர்பார்க்க இருக்கிறது?’ என்று தத்துவார்த்தமாக ஒரு கேள்வியை கோலியை நோக்கி கேட்கிறார் சுனில் கவாஸ்கர்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: MS Dhoni, Virat Kohli

  அடுத்த செய்தி