ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Mr. Beanக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு? பாகிஸ்தானை ஏன் கிண்டல் செய்கிறார்கள் தெரியுமா?

Mr. Beanக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு? பாகிஸ்தானை ஏன் கிண்டல் செய்கிறார்கள் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

ஜிம்பாவேவுக்கு வாழ்த்துதெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாசிம் ஜாபர், வீரேந்திர சேவாக் உள்ளிட்டோரம் Mr.Bean படத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  Mr. Beanக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு? பாகிஸ்தானுடன் ஜிம்பாவே தோற்ற நிலையில் ஏன் அனைவரும் Mr.Bean குறித்து பேசுகின்றனர் என்பதை பற்றி  பார்க்கலாம்.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில், பெர்த்தில் நடைபெற்ற போட்டியில், தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள ஜிம்பாவே அணியிடம்

  முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி 1 ரன்னில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

  டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் தோல்வி

  இந்த கிரிக்கெட் செய்திக்கு முன்னாள் Mr. Bean குறித்து பார்த்துவிடலாம். முழு வளர்ச்சியடைந்த மனிதனிடம் காணப்படும் குழந்தைத்தனமான குறும்புகளை விவரித்து 1990களில் இங்கிலாந்து தொலைக்காட்சிகளில் வெளியான இந்த தொடர் குழந்தைகள் மட்டுமன்றி, பெரியவர்களிடையேயும் வரவற்பு பெற்றது. இதில் Mr.Bean கதாபாத்திரத்தில், அதை எழுதிய Rowan Atkinson நடித்திருந்தார்.

  Mr.Bean போன்ற தோற்றமுடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசீப் முகம்மது, கடந்த 2016 ஆம்ஆண்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக ஜிம்பாவே அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அந்த நிகழ்ச்சி

  வெற்றி பெறவில்லை.

  Mr. Bean போல் தோற்றம் கொண்ட பாகிஸ்தானின் ஆசிப் முகமது

  இதை சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் ஜிம்பாவே போட்டிக்கு முன்னதாக டிவிட்டரில் பதிவிட்ட, ஜிம்பாவே ரசிகர் ஒருவர், பாகிஸ்தானை மன்னிக்கவே முடியாது என்றும், போலி Mr.Beanஐ அனுப்பிவைத்த உங்களுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என தெரிவித்திருந்தார்.

  இதையு படிங்க: சமம் என்றாலும் சமம் இல்லை... இந்திய கிரிக்கெட்டில் ஆடவர், மகளிர் இடையே நிலவும் ஊதிய பேதம்

  இந்த நிலையில், போட்டியில் ஜிம்பாவே 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற, தனது அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஜிம்பாவே அதிபர் எமர்சன் டம்புட்ஸோ மனங்காக்வா, அடுத்த முறையாவது

  உண்மையான Mr.Bean-ஐ அனுப்பி வையுங்கள் என பதிவிட்டிருந்தார்.

  இதற்கு பதிலடி தந்த பாகிஸ்தான் பிரதமர் எங்களிடம் Real Mr.Bean இல்லாமல் இருக்கலாம் ஆனால், உண்மையான கிரிக்கெட் விளையாடும் உத்வேகம் உள்ளது என்றும் ஜிம்பாவே அதிபரே உங்கள் அணி சிறப்பாக விளையாடியது. வாழ்த்துகள் எனவும் தெரிவித்திருந்தார்.

  Mr.Bean விவகாரம் தற்போது கிரிக்கெட் உலகில் பற்றி எரிகிறது. ஜிம்பாவேவுக்கு வாழ்த்துதெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாசிம் ஜாபர், வீரேந்திர சேவாக் உள்ளிட்டோரும் Mr.Bean படத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  செய்தியாளர்: பெர்லின்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Mr Beans movie, Pakistan cricket, T20 World Cup