என்னதான் நடக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில்?- கோச் லாங்கர் மீது ஏன் இத்தனை பழி?

ஜஸ்டின் லாங்கர்.

தென் ஆப்பிரிக்காவில் பந்தைச் சேதம் செய்த மிகப்பெரிய சம்பவத்துக்குப் பிறகே ஆஸ்திரேலிய அணி கிழிந்து தொங்கத் தொடங்கி விட்டது, கிழிசலை ஒட்டவே ஜஸ்டின் லாங்கரைப் பயிற்சியாளராகவும், டிம் பெய்னைக் கேப்டனாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. ஆனால் லாங்கருக்கும் வீரர்களுக்கும் ஆகவில்லை, ஒத்துப் போகவில்லை.

 • Share this:
  தென் ஆப்பிரிக்காவில் பந்தைச் சேதம் செய்த மிகப்பெரிய சம்பவத்துக்குப் பிறகே ஆஸ்திரேலிய அணி கிழிந்து தொங்கத் தொடங்கி விட்டது, கிழிசலை ஒட்டவே ஜஸ்டின் லாங்கரைப் பயிற்சியாளராகவும், டிம் பெய்னைக் கேப்டனாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. ஆனால் லாங்கருக்கும் வீரர்களுக்கும் ஆகவில்லை, ஒத்துப் போகவில்லை.

  இதனையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வீரர்களுடன் அவசரநிலை பேச்சுகளுக்காக அழைப்பு விடுத்து பேச்சு வார்த்தை நடந்து அடுத்த ஆண்டு லாங்கரின் ஒப்பந்தம் முடிவடைகிறது. அதுவரை அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  லாங்கரின் கடுகடுத்த, சிடுசிடுப்பான அணுகுமுறையினால் வீரர்கள் அவருக்கு ஒத்துழைக்க மறுப்பதாகத் தெரிகிறது, அதனால்தான் மே.இ.தீவுகளுக்கு எதிராக 4-0 என்றும் வங்கதேசத்துக்கு எதிராக 4-1 என்றும் டி20 தொடர்களை இழந்தது ஆஸ்திரேலியா.

  இந்நிலையில் ஜஸ்டின் லாங்கர் வீரர்கள் தன் முதுகில் குத்துவதாக உணர்கிறார் என்கிறார் உஸ்மான் கவாஜா. “இது உண்மைதான். அதனால்தான் இது கடும் ஏமாற்றமளிக்கிறது. உண்மையில் மோசமாக ஆஸ்திரேலிய அணி தெரிகிறது. இதற்கு உடனடியாகத் தீர்வு காண்பது அவசியம்.

  எப்போதும் தவறு பயிற்சியாளர்கள் மேல் இல்லை. வீரர்கள் சரியாக ஆடுவதில்லை என்பதே விஷயம். ஒரு கட்டத்தில் அணியின் சுமையை வீரர்கள் சுமந்து பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகிறது. கோச் மட்டுமே காரணம் கிடையாது.

  லாங்கர் மிகவும் நேயமிக்க ஒரு மனிதர், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பெரிதும் விரும்புபவர். அனைவரும் சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைப்பவர். வெற்றிதான் அவரை உந்துகிறது, அதுவும் நல்ல வழியில் வெற்றி பெறுவதைத் தான் அவர் விரும்புகிறார். பந்து சேத சம்பவத்துக்குப் பிறகே அப்படிப்பட்ட ஒரு பண்பாட்டை அணியில் உருவாக்கவே அவர் பாடுபட்டார்.

  அவரிடம் உள்ள பலவீனம் சட்டென கோபப்படுவார், உணர்ச்சிவயப்படுவார். அவரது மிகபெரிய பலவீனமே அவரது உணர்ச்சிதான். இதுதான் அவரை கீழே தள்ளி விடுகிறது. தான் இன்னும் மேம்பட வேண்டும் என்று அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். நான் அவருடன் பேசியிருக்கிறேன்.

  என்னை அணியிலிருந்து அவர்தான் நீக்கினார், ஆனால் நான் அவருடன் நெருக்கமாகவே இருக்கிறேன்” என்றார் உஸ்மான் கவாஜா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டி20 உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்காக தயாரிப்பில் ஈடுபடும் நிலையில் லாங்கருடனான இந்த விவகாரம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை மட்டுமல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே ஆட்டம் காணச் செய்துள்ளது. இப்போது உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது என்றாலும் காயம் இருக்கவே செய்யும் என்கின்றனர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வல்லுநர்கள்.
  Published by:Muthukumar
  First published: