Home /News /sports /

பிரித்வி ஷா என்ன தவறு செய்தார்? ஏன் இப்படி ஒழிக்கிறீர்கள்?: ரசிகர்கள் வேதனை

பிரித்வி ஷா என்ன தவறு செய்தார்? ஏன் இப்படி ஒழிக்கிறீர்கள்?: ரசிகர்கள் வேதனை

பிரிதிவி ஷா

பிரிதிவி ஷா

சேவாக், சச்சின், லாரா ஆகியோரது கூட்டுக்கலவை என்று ரவி சாஸ்திரியினாலும், நான் இவர் வயதில் இவரைப்போல் ஆடியதில்லை என்று விராட் கோலியும் விதந்தோதிய பிரித்வி ஷா இந்திய அணித் தேர்வுக்குழுவினரால் மருந்துக்குக் கூட பரிசீலிக்கப்படாததற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...

    2021-ல் இந்தியாவுக்காக இலங்கைக்கு எதிராக ஆடினார், பிரகாசமாக தொடங்கிய இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சடுதியில் முடிந்து விடுமோ, ஒரு திறமை மிக்க வீரரின் கதி இப்படி ஆகி விடுமோ என்று ரசிகர்கள் நியாயமான கேள்விகளை கவலையுடன் எழுப்பி வருகின்றனர்.

    கடைசியாக டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2020-ல் ஆடினார், டெஸ்ட் போட்டிகளில் அவர் நன்றாகத்தான் ஆடினார். குறிப்பாக நியூசிலாந்தில் 3 அரைசதங்களை அடித்தார், கைல் ஜேமிசனை கவர் திசையில் 2 சிக்சர்கள் விளாசினார். ஆனால் திடீரென இந்திய அணியிலிருந்து அவர் ஓரங்கப்பட்டு வருகிறார், ஒருவரும் பிசிசிஐ-யை கேள்வி கேட்க முடியாது, அது ஒரு மூடுண்ட அமைப்பாக மாறி வருகிறது.

    மும்பைக்காக ரஞ்சியில் ஆடிய பிரித்வி ஷா, உத்தரகாண்ட் அணிக்கு எதிராக மும்பை சாதனை வெற்றியான 725 ரன்கள் வ்த்தியாசத்தில் வெற்றி பெற்ற போது ஷா 21 மற்றும் 72 ரன்களை இரண்டு இன்னிங்ஸ்களில் எடுத்தார்.

    இதனையடுத்து இந்திய அணித் தேர்வுக்குழுவின் புதிரான செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் ரசிகர்கள் பிரித்வி ஷாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர்.

    இப்போது அயர்லாந்துக்கு எதிரான தொடரிலும் பிரித்வி ஷா இல்லை, ஓரங்கட்டுப்பட்டு விட்டார், என்ன பிரச்சனை, ஏன் இவர் பரிசீலிக்கப்படவில்லை என்பது பற்றி ஒரு தகவலும் இல்லை, பிசிசிஐக்கு ஒரு கேள்வியும் இதுவரை எழுப்பப்படவில்லை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Prithvi Shaw

    அடுத்த செய்தி