இந்திய டி20 மற்றும் ஒருநாள் போட்டி ஸ்விங் பவுலர் தீபக் சாஹர், ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், இடது கை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் டி.நடராஜன் ஆகியோர் காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் புனர்வாழ்வு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
தீபக் சாஹர் தொடை காயத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இவர் குணமடைய இன்னும் 4-5 வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. வாஷிங்டன் சுந்தர் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கிட்டத்தட்ட முழு உடல் தகுதி பெறும் நிலைக்கு திரும்பியுள்ளார்.
இவர் லங்காஷயர் அணிக்கு ஆடவிருக்கிறார். இது அவரது காயத்திற்குப் பிறகான கிரிக்கெட்டில் பெரிதும் உதவும். கொல்கத்தாவில் மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் காயமடைந்த தீபக் சாஹர், ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்தும் ஒரு போட்டியில் கூட ஆட முடியாமல் போனது, அடுத்த ஐபிஎல் தொடரில் தோனியே இவரை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்.
தீபக் சாஹர் தன் காயத்தின் இப்போதைய நிலை குறித்து பிடிஐ-யிடம் கூறும்போது, “ஒரே சமயத்தில் 4 முதல் 5 ஓவர்கள் வரை வீசுகிறேன். உடல் தகுதி மீட்பு செயல்பாடுகள் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கின்றன. மேட்ச் ஃபிட் ஆவதற்கு இன்னும் 4-5 வாரங்கள் ஆகும்” என்றார்.
டி.நடராஜனின் உடல் நலமீட்பு நடவடிக்கை எந்த கட்டத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை, அவர் காயத்தின் தன்மைப்படி அவரும் இன்னும் 3-4 வாரங்களில் தேற வேண்டும், ஆனால் என்னவென்று நிலவரம் தெரியவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Cricketer natarajan, IPL, Washington Sundar