• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மீண்டெழும் கிரிக்கெட் போட்டி... இங்கிலாந்து சென்றடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி

மீண்டெழும் கிரிக்கெட் போட்டி... இங்கிலாந்து சென்றடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணி

இங்கிலாந்து அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள் அணி சென்றடைந்தது.

  • Share this:
    மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இது மிகப்பெரிய முன்னேற்றம் என்று அந்நாட்டு அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டல் தெரிவித்துள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக மற்ற நாடுகளுக்கு கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக கிரிக்கெட்டில் புதிய நடைமுறைகளை ஐசிசி கொண்டு வந்துள்ளது. கிரிக்கெட் பந்தில் எச்சில் பயன்படுத்த தடை, மற்ற நாட்டு வீரர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அடுத்த மாதம் ஜூலை 8-ம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து சென்றடைந்து. முதற்கட்டமாக அவர்கள் தனிமைப்படுத்த உள்ளனர். பின்னர் வழக்கம் போல் அவர்கள் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

    இதனிடையே இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு பின் சுமார் 2 மாதங்களுக்கு பின் நடைபெற உள்ள கிரி்க்கெட் நேரலை போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: