கொரோனோவை வீழ்த்திய டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி... சொந்த மண்ணில் வீழ்ந்த இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கொரோனோவை வீழ்த்திய டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி... சொந்த மண்ணில் வீழ்ந்த இங்கிலாந்து
ENG vs WI
  • Share this:
உலக நாடுகள் மத்தியில் கொரோனோ அச்சம் குறையாத நிலையில், அதிலிருந்து மீண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ரசிகர்கள் இல்லாமல் சௌத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் போட்டியில்  இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மழை குறுக்கிட்டதால் முதல் நாள் போட்டியில் 17 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முதல் இன்னிங்ஸில் ஹோல்டரின் வேகப்பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடி 318 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பிராத்வெயிட் 65 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார்.


ENG vs WI


பின்னர் 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் சிபிலி ஆகியோர் நிலைத்து நின்று விளையாடு அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். சிபிலி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். பின்னர்  வந்த வீரர்கள் கேப்ரில் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்ரில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் ஆர்சர் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் வந்த பிளாக்வுட் அணியை சரிவிலிருந்து மீட்டு 95 ரன்கள் குவித்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். முடிவில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
அத்துடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை ருசித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்திய கேப்ரில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நிறவெறிக்கு எதிராக இரு அணி வீரர்களும் "blacklivesmatter" என்ற வாசகம் பொறித்த ஜெர்சி அணிந்து களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading