• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மோசமான பந்தில் டெஸ்ட் ஹாட்ரிக் சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் கேசவ் மகராஜ்

மோசமான பந்தில் டெஸ்ட் ஹாட்ரிக் சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் கேசவ் மகராஜ்

கேசவ் மகராஜ் ஹாட்ரிக் சாதனை.

கேசவ் மகராஜ் ஹாட்ரிக் சாதனை.

செயிண்ட் லூசியாவில் மே.இ.தீவுகளுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான 2வது, கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

  • Share this:
    முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 298 ரன்களுக்கு மடிந்தது, தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்களுக்குக் காலியானது, மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணி கிமார் ரோச், கைல் மேயர்ஸ் பந்து வீச்சில் 174 ரன்களுக்குச் சுருள, மே.இ.தீவுகளுக்கு வெற்றி இலக்கு 324 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது, இதில் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 4வது நாளில் மே.இ.தீவுகள் 165 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்று கைப்பற்றியது.

    இதில் 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் இடது கை ஸ்பின்னர் கேஷவ் மகராஜ் ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

    இன்னிங்சின் 37வது ஓவரின் 3வது பந்தில் மே.இ.தீவுகள் வீரர் கெய்ரன் போவெல் (51) ஸ்வீப் ஆடி தேவையில்லாமல் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார், அடுத்த பந்தே ஜேசன் ஹோல்டர் இன்சைடு எட்ஜில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆக, மகராஜுக்கு ஒரு அரிய டெஸ்ட் ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்தது.

    Also Read: கேன் வில்லியம்சனின் தடுப்பாட்ட மாஸ்டர் கிளாஸ், ஷமி அட்டகாசம்- சுவாரசியமான கட்டத்தில் பைனல்

    அடுத்ததாக இறங்கினார் ஜொஷுவா டா சில்வா, இவர் பந்தே திரும்பாத நேர் நேர் தேமா லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தை தொட அது லெக் ஸ்லிப்பில் முல்டரின் நல்ல கேட்சாக மகராஜ் அபார ஹாட்ரிக்கை நிறைவு செய்தார்.

    ஆனால் ஹாட்ரிக் விக்கெட்டுகளைப் பார்த்தால், போவெல் தேவையில்லாமல் ஸ்வீப் ஆடி அவுட் ஆனார், ஜேசன் ஹோல்டர் மட்டையை தொங்க விட்டார், ஜொஷுவா டா சில்வாவோ லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தைத் தொட்டார், கெட்டார். தேவையற்ற ஹாட்ரிக் ஆனால் எப்படி ஹாட்ரிக் என்பது ரெக்கார்ட் புத்தகங்களில் பதிவாகாது, ஹாட்ரிக் என்றுதான் பதிவாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் மோசமான ஒரு பந்தில் ஹாட்ரிக் எடுத்ததை மகராஜ் ஒப்புக் கொண்டார்.

    அவர் கூறும்போது, “நான் இன்னும் கொஞ்சம் நல்ல பந்தை வீசி ஹாட்ரிக் சாதனை புரிந்திருக்கலாம். ஆனால் வியான் முல்டர் மிகப்பிரமாதமாக அந்தக் கேட்சை பிடித்தார். அது ஒரு சூப்பர்ப் ரியாக்‌ஷன் கேட்ச். இதற்காக அவர் சாப்பிட எது கேட்டாலும் குடிக்க எது கேட்டாலும் எந்த ட்ரிங்க்ஸ் கேட்டாலும் செலவு என்னுடையது” என்றார்.

    தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரும் “கேசவ் மகராஜின் பல மோசமான பந்துகளில் இதுவும் ஒன்று” என்று பவுச்சரும் ஜோக் அடித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: