• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • West Indies vs South Africa | 12 பவுண்டரி, 7 சிக்சர்கள் 141 ரன்கள் விளாசிய குவிண்டன் டி காக்: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மே.இ.தீவுகள் போராட்டம்

West Indies vs South Africa | 12 பவுண்டரி, 7 சிக்சர்கள் 141 ரன்கள் விளாசிய குவிண்டன் டி காக்: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மே.இ.தீவுகள் போராட்டம்

141 ரன்களில் 12 பவுண்டரி 7 சிக்சர்கள் விளாசிய டி காக்.

141 ரன்களில் 12 பவுண்டரி 7 சிக்சர்கள் விளாசிய டி காக்.

செயிண்ட் லூசியாவில் தென் ஆப்பிரிக்கா -மே.இ.தீவுகள் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றன, இதில் 2ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 322 ரன்கள் எடுத்தது.

  • Share this:
குவிண்டன் டி காக் 170 பந்துகளில் 12 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 141 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். முன்னதாக மே.இ.தீவுகள் அணி தன் முதல் இன்னிங்சி; 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இதில் லுங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளையும் நார்ட்யே 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர். 225 ரன்கள் பின் தங்கிய மே.இ.தீவுகள் தன் 2வது இன்னிங்சிலும் சொதப்பி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது இன்னும் 143 ரன்களை எடுக்க வேண்டியுள்ளதால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது மே.இ.தீவுகள்.

2ம் நாள் ஆட்ட முடிவில் ராஸ்டன் சேஸ் 21 ரன்களுடனும் துணைக் கேப்டன் ஜெர்மைன் பிளாக்வுட் 10 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ரபாடா, நார்ட்யே முறையே 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 128/4 என்று இருந்தது. கேப்டன்சியிலிருந்து வெளியே வந்ததால் டி காக் சுதந்திரமாக ஆடினார். இது டி காக்கின் 6வது டெஸ்ட் சதம். அக்டோபர் 2019-க்குப் பிறகு முதல் சதம்.

வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சும் கட்டுக்கோப்பு இல்லாமல் தாறுமாறாக இருந்தது. கொஞ்சம் முதலில் பந்து ஸ்விங் ஆனாலும் பந்து பழசானதும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு கட்டுக்கோப்பு இழந்தது இதை குவிண்டன் டி காக் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

Also Read: French Open 2021 | டென்னிஸின் மகா ஆட்டம்: 93 நிமிடங்கள் நடந்த ‘டை பிரேக்’ செட்; ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

தொடங்கிய முதல் பந்தே கிமார் ரோச்சை கட் ஷாட்டில் பவுண்டரி அடித்து 2ம் நாளை தொடங்கினார் டி காக். கடைசி பந்தை மிட் ஆஃப்பில் பவுண்டரி விளாசி ஆக்ரோஷமாக ஆரம்பித்தார் டி காக். முதல் 5 ஓவர்களில் 24 ரன்கள் விளாசப்பட்டது, பிறகு ஜெய்டன் சீல்ஸ் மெய்டன் வீசினார்.

Also Read: Euro 2020 Italy vs Turkey : இத்தாலி 3-0 என ஆதிக்க வெற்றி; ஓன் கோலால் சறுக்கிய துருக்கி

ராஸ்டன் சேஸ் பந்தை ஸ்வீப் ஆட முயன்று எல்.பி. ஆனார் டி காக், அப்போது 23 ரன்களில் இருந்தார், ஆனால் ரிவியூ செய்ததில் பந்து கிளவ்வில் பட்டது தெரியவந்தது, தப்பிப் பிழைத்தார் டி காக். இன்னொரு முனையில் ரஸி வான் டெர் டியூசன் 46 ரன்கள் எடுத்து ஆடிவந்த போது ஹோல்டர் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். உணவு இடைவேளைக்கு முன்பு கிமார் ரோச், சீல்ஸ் ஆகியோரை கொண்டு வந்தார் கேப்டன் பிராத்வெய்ட், இதில் சீல்ஸ் அபாரமாக வீசினார் வியான் முல்டரை தன் அவுட்ஸ்விங்கரினால் படுத்தி எடுத்தார். முல்டரும் உணவு இடைவேளைக்குப் பிறகு 25 ரன்களில் ஹோல்டரிடம் வெளியேறினார்.

டி காக் ஒரு பவுண்டரி அடித்து 98 பந்துகளில் அரைசதம் கண்டார். எதிர்முனையில் மகராஜ் விக்கெட்டை ஸ்பின்னர் கார்ன்வால் கைப்பற்றினார். புதிய பந்தில் ரபாடா ரோச் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கட்டத்தில்தான் டி காக் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று ஆடினார், சிறந்த பவுலர் சீல்சை ஒரு பவுண்டரியும் இரண்டு மகா சிக்சர்களையும் ஒரே ஓவரில் விளாசினார். நார்ட்யே நல்ல ஸ்டாண்ட் கொடுக்க இருவரும் 79 ரன்கள் சேர்த்தனர். கைல் மேயர்ஸை ஸ்கொயர் லெக் மேல் தூக்கி விட்டு டி காக் தன் சதத்தை எட்டினார். காண்டா மிருகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சிக்னல் செய்த டி காக், நிறவெறிக்கு எதிரான மண்டியிடுதலில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. நார்ட்யேவை ஹோல்டர் வீழ்த்தினார். இடையே ஹோல்டரையும் ஒரு சிக்ஸ் வாங்கினார் டி காக். 7 சிக்சர்களுடன் டிவில்லியர்ஸ் டெஸ்ட் சிக்ஸ் சாதனையை சமன் செய்தார். அதாவது ஒரு இன்னிங்சில் 7 சிக்சர்கள் சாதனையாகும் இது. கடைசியில் டி காக் 141 நாட் அவுட், தென் ஆப்பிரிக்கா 322 ஆல் அவுட்.

ஹோல்டர் 4 விக்கெட், சீல்ஸ் 3 விக்கெட்.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணியில் கேப்டன் பிராத்வெய்ட் 7 ரன்களில் ரபாடாவிடம் எல்.பி.ஆனார். கன்கஷன் பதிலி வீரர் கெய்ரன் பொவெலும் 14 ரன்களில் ரபாடாவிடம் எல்.பி.ஆனார். ஷெய் ஹோப், கைல் மேயர்ஸை ஆன்ரிச் நார்ட்யே வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட முடிவில் 82/4 என்று உள்ளது, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 143 ரன்களை எடுக்க வேண்டும். கஷ்டம் தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: