Home /News /sports /

WI vs NZ 3rd T20-ஒரு வழியாக நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல்

WI vs NZ 3rd T20-ஒரு வழியாக நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல்

வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி

கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. தொடரை நியூசிலாந்து 2-1 என்று கைப்பற்றியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. தொடரை நியூசிலாந்து 2-1 என்று கைப்பற்றியது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் வெறும் 145 ரன்களையே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது, தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150/2 என்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆறுதல் வெற்றியானாலும் செம வெற்றி இது.

    பவுலிங்கில் ஓடியன் ஸ்மித் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் மற்றும் ஷமர் புரூக்ஸ் 13 ஓவர்களில் 102 ரன்களைச் சேர்க்க நியூசிலாந்து வாயடைத்துப் போனது. ஷமர்புரூக்ஸ் 59 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, பிராண்டன் கிங் 35 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்தார். கடைசியில் ரோவ்மென் போவெல் இறங்கி 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உடன் 15 பந்துகளில் 27 ரன்கள் விளாசி முடித்து வைத்தார்.

    நியூசிலாந்து தரப்பில் லாக்கி பெர்கூசன் 4 ஓவர்களில் வெறும் 16 ரன்களையே கொடுத்து விக்கெட் எடுக்காவிட்டாலும் ஆட்டிப்படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் இந்தத் தொடரில் முதல் முதலாக ஆடிய அகீல் ஹுசைன் 2 விக்கெட்டுகளை 28 ரன்களுக்கு எடுத்தார்.

    முதல் 2 போட்டிகளில் ஆடிய நியூசிலாந்து அணி போலவே இல்லை, கேப்டன் கேன் வில்லியம்சன் 27 பந்துகளில் 24 என்று அறுத்தார். கிளென் பிலிப்ஸ் மட்டுமே 26 பந்துகளில் 41 ரன்கள் விளாசி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இறுதி வரை கிளென் பிலிப்ஸ் நின்றிருந்தால் ஒருவேளை நியூசிலாந்து கிளீன் ஸ்வீப் செய்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் ஆனால் கிளென் பிலிப்ஸ் 17வது ஓவரில் அவுட் ஆன போது நியூசிலாந்து 125/5 என்று இருந்தது.

    முதல் 2 போட்டிகளில் கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களுக்கும் மேல் விளாசிய நியூசிலாந்து நேற்று 39 ரன்களையே கடைசி 5 ஓவர்களில் எடுத்தது. தொடர் நாயகன் கிளென் பிலிப்ஸ் ஆட்ட நாயகன் பிராண்டன் கிங்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: New Zealand, T20, West indies

    அடுத்த செய்தி