Home /News /sports /

பார்முக்கு வந்தார் கேன் வில்லியம்சன் - முதல் டி20-யில் நியூசிலாந்து வெற்றி

பார்முக்கு வந்தார் கேன் வில்லியம்சன் - முதல் டி20-யில் நியூசிலாந்து வெற்றி

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று உள்ளது. இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.

    முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 33 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கான்வே 29 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), நீசம் 15 பந்தில் 33 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    ஓடியன் சுமித் 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் அந்த அணி 13 ரன் வித்தியாசத்தில் தோற்றது . புரூக்ஸ் 42 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) , ரொமாரியோ ஷெப்பர்டு 16 பந்தில் 31 ரன்னும் (1பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    சான்ட்னெர் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 13-ந்தேதி நடக்கிறது.

    இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு இடையூறுகள் அதிகமிருந்தன. மார்டின் கப்தில், டெவன் கான்வே இணைந்து முதல் விக்கெட்டுக்காக 62 ரன்கள் எடுத்தனர்.ஆனால் இருவருமே ஓடியன் ஸ்மித்திடம் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்ந்தனர். ஓடியன் ஸ்மித் தனது சிறந்த பந்து வீச்சான 3/32 என்று அசத்தினார்.ஷிம்ரன் ஹெட்மையரின் பிரில்லியண்ட் ஒரு கை கேட்சுக்கு கப்டில் வெளியேறினார். டெவன் கான்வே டாப் எட்ஜில் காலியானார்.

    12வது ஓவரின் முடிவில் மழை வரும்போது நியூசிலாந்து 95/2 என்று இருந்தது. கிளென் பிலிப்ஸ், கேன் வில்லியம்சன் களத்தில் இருந்தனர், 2 மணி நேரம் ஆட்டம் இல்லை. பிறகு வந்த போது கிளென் பிலிப்ஸ் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து கொஞ்சம் தடுமாறியது ஆனால் கேப்டன் கேன் வில்லியம்சன் 18 பந்துகளில் 33 ரன்களை விளாசினார். நியூசிலாந்து 185/5 என்று முடிந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 79/5 என்று 12வது ஓவரில் சரிந்தது ,இதில் ஷம்ரா புரூக்ஸ் மட்டுமே 42 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ஹோல்டர் 25 ரன்களை விளாசி ஆட்டமிழந்த போது 114/7 என்று 16வது ஓவரில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ், அங்கிருந்து ஓடியன் ஸ்மித் 12 பந்துகளில் 27 விளாச, ரொமாரியோ ஷெப்பர்ட் 16 பந்தில் 31 விளாசி 58 ரன்களை 28 பந்துகளில் விளாசி நம்பிக்கை கொடுத்தனர், ஆனால் 172 ரன்களைத் தாண்ட முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது. 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் சாய்த்த சாண்ட்னர் ஆட்ட நாயகன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: New Zealand, T20, West indies

    அடுத்த செய்தி