Home /News /sports /

நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்த வெஸ்ட் இண்டீஸ்: 2020-க்குப் பிறகு நியூசி.மோசமான தோல்வி

நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்த வெஸ்ட் இண்டீஸ்: 2020-க்குப் பிறகு நியூசி.மோசமான தோல்வி

ஷம்ரா புரூக்ஸ் அபார ஆட்டம்

ஷம்ரா புரூக்ஸ் அபார ஆட்டம்

பிரிட்ஜ் டவுனில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிரிட்ஜ் டவுனில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் 190 ரன்களுக்குச் சுருண்டது, மே.இ.தீவுகளின் ஹோல்டர் 2 விக்கெட்டுகளைச் சாய்க்க அகீல் ஹுசைன் மற்றும் அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பறினர், அதிகபட்சமாக
    கேப்டன் கேன் வில்லியம்சன் 34 ரன்கள் எடுத்தார், தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ஓவர்களில் 193/5 என்று வெற்றி பெற்றது. ஷம்ரா புரூக்ஸ் 79 ரன்கள் எடுத்தார்.

    புரூக்ஸ் 58 பந்துகளில் தன் 4வது அரைசதத்தை எடுத்தார். மார்ஷ் 2020-க்குப் பிறகு நியூசிலாந்தை ஒருநாள் போட்டிகளில் ஆல் அவுட் செய்த பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றது.

    ஸ்பின் பிட்சில் கொஞ்சம் பவுன்ஸ் இருந்ததால் அகீல் ஹுசைன் மற்றும் அறிமுக ஸ்பின்னர்களான கெவின் சின்க்ளைர், யானிக் கேரியா ஆகியோர் நியூசிலாந்தை மிடில் ஓவர்களில் கட்டிப்போட்டனர். மார்டின் கப்தில் (24), ஃபின் ஆலன் (25) 41 ரன்கள் தொடக்கம் கொடுத்தனர். ஃபின் ஆலன் 7வது ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டரை 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். பிறகு மழைக் குறுக்கிட்டது, மீண்டும் தொடங்கிய போது ஆலன் 25 ரன்களில் வெளியேறினார். ஹுசைன் இவரை சாய்த்தார்.

    கப்திலும் அடுத்த ஹுசைன் ஓவரில் வெளியேறினார். 53/2 என்ற நிலையில் கேன் வில்லியம்சன் மீட்புப் பணியில் ஈடுபட்டார். இவர் 50 பந்துகளில்தான் 34 ரன்களை எடுக்க முடிந்தது, ஆனால் எதிர்முனையில் டெவன் கான்வே 4 ரன்களில் பொறுப்பற்ற ஷாட்டில் ஹுசைனிடம் வீழ்ந்தார், அதைப் போலவே டாம் லேதம் அறிமுக ஸ்பின்னர் சின்க்ளைரிடம் எல்.பி.ஆனார். நியூசிலாந்து 88/4 என்று ஆனது. டேரில் மிட்செல் கொஞ்ச நேரம் நின்று 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களை எடுத்தார். ஆனால் ஜோசப் இவரை எல்.பி.யில் வீழ்த்தினார். வில்லியம்சனும் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

    ஆல்ரவுண்டர்கள் மைக்கேல் பிரேஸ்வெல் 31, சாண்ட்னர் 25, சவுதீ 12 அடிக்க நியூசிலாந்து ஒருவழியாக 190 ரன்களை எட்டியது. ட்ரினிடாடைச் சேர்ந்த ரிஸ்ட் ஸ்பின்னர் கேரியா 9 ஓவர் 49 ரன் ஒரு விக்கெட், ஆனால் ஜோசப், அகீல் ஹுசைன் தலா 3 விக்கெட், ஹோல்டர் 2 விக்கெட்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மழையால் பாதிக்கப்பட்டாலும் கைல் மேயற்ச், ஷேய் ஹோப் சோபிக்காமல் வெளியேற 37/2, பிறகு 74/3 என்று ஆனாலும் ஷம்ரா புரூக்ஸ் 91 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 79 விளாச, ஷேய் ஹோப் 26, பூரன் 28 பங்களிப்பு செய்ய வெஸ்ட் இண்டீஸ் 193/5 என்று வென்றது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: New Zealand, West indies

    அடுத்த செய்தி