• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வெஸ்ட் இண்டீஸ்- பங்களாதேஷ் போட்டி- யாருக்கு வெற்றி?- நேருக்கு நேர் ரெக்கார்ட், முழு விவரம்

வெஸ்ட் இண்டீஸ்- பங்களாதேஷ் போட்டி- யாருக்கு வெற்றி?- நேருக்கு நேர் ரெக்கார்ட், முழு விவரம்

டி20 உலககோப்பை 2021: பங்களாதேஷ்-வெஸ்ட் இண்டீஸ் மோதல்

டி20 உலககோப்பை 2021: பங்களாதேஷ்-வெஸ்ட் இண்டீஸ் மோதல்

  • Share this:
    ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று ஷார்ஜாவில் வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்கள் முதல் 2 போட்டிகளில் படுதோல்வி அடைந்த அணிகளாகும். இன்னும் புள்ளிகள் பட்டியலிலேயே வரவில்லை.

    இந்நிலையில் இன்று ஷார்ஜாவில் மதியம் 3.30 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன, யார் ஜெயித்தால் என்ன என்பது போன்ற போட்டி என நினைக்கலாம் ஆனால் இது போன்ற போட்டிகள் சில வேளைகளில் நம் நகங்களைக் காலி செய்து விடும்.

    இரு அணிகளின் நேருக்கு நேர் ரெக்கார்ட்:

    2007-2021- இரு அணிகளும் ஒருவரையொருவர் எதிர்த்து இதுவரை 12 முறை மோதியுள்ளனர். இதில் வெஸ்ட் இண்டீஸ் 6 முறை வென்றுள்ளது. பங்களாதேஷ் 5 முறை வென்றுள்ளது, ஒரு ஆட்டம் முடிவு ஏற்படாதது.

    வெஸ்ட் இண்டீஸ் அதிகபட்சமாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக 197 ரன்களை எடுத்துள்ளது. குறைந்த ஸ்கோர் 93 ஆல் அவுட். அதே போல் வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 211.

    இரு அணிகளிலும் அதிக ரன்கள் எடுத்ததில் தமிம் இக்பால் 255, ஷாகிப் அல் ஹசன் 236, மஹ்முதுல்லா 232. சிறந்த பந்து வீச்சில் ஷாகிப் அல் ஹசன் 19 விக்கெட்டுகள், கீமோ பால் 13 விக்கெட்டுகள், முஸ்தபிசுர் ரஹ்மான் 13 விக்கெட்டுகள்.

    இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாக காணலாம். 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஹாட் ஸ்டாரில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உண்டு.

    வெஸ்ட் இண்டீஸ் அணி : எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், ஹெட்மையர், பூரன், பொலார்ட், ரசல், பிராவோ, ராஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ஆந்த்ரே பிளெட்சர், ஹெய்டன் வால்ஷ்.

    பங்களாதேஷ் அணி: முகமது நயீம், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மஹமுதுல்லா ஆபிஃப் ஹுசைன், நுரூல் ஹசன், சவுமியா சர்க்கார், மெகதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமெட், ரூபல் ஹுசைன்.

    Also Read: T20 Worldcup: பாகிஸ்தானுக்கு டேஞ்சர்: ஆப்கானிஸ்தான் அதிர்ச்சியளிக்குமா? - ஆம் என்கிறது கணிப்புகள்
    Also Read: T20 World Cup 2021: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியப் பந்து வீச்சில் மாற்றம்- புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: