மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கிமார் ரோச்சின் கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமான நாளாக நேற்று அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை அவர் கடந்தார். முதல் இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்த வங்கதேசம் மே.இ.தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 408 ரன்களுக்கு எதிராக 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
கிராஸ் ஐஸ்லெட்டில் நடைபெறும் 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இன்னும் 42 ரன்கள் உள்ள நிலையில் நுருல் ஹசன் 16 ரன்களுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் ரன் எடுக்காமலும் கிரீசில் உள்ளனர். கிமார் ரோச் 10 ஓவர்கள் 32 ரன் 3 விக்கெட், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட், ஜேடன் சீல்ஸ் 1 விக்கெட்.
கிமார் ரோச் முதல் 3 விக்கெட்டுகளான தமிம் இக்பால் (4), ஹசன் மாய் (13), அனமுல் ஹக் (4) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தன் 73வது டெஸ்ட் போட்டியில் கிமார் ரோச் 253 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார்.
கிமார் ரோச் இப்போது 519 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கும் கார்ட்னி வால்ஷ் உள்ளிட்டோர் பட்டியலில் 6ம் இடத்தில் இருக்கிறார். ரோச்சின் 250 வது விக்கெட் தமிம் இக்பால், இவர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
வங்கதேச அணியில் நஜ்முல் ஹுசைன் ஷாண்ட்டோ 42 ரன்களுடன் இதுவரை அதிகபட்ச ரன்னை எடுத்துள்ளார். இவர் அல்ஜாரி ஜோசப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி கைல் மேயர்சின் அருமையான 126 ரன்களுடன் 340/5 என்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் மேலும் 68 ரன்களைச் சேர்த்தது. மேயர்ஸ் 146 ரன்கள் எடுத்தார். இதில் 18 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும். இவரை வீழ்த்திய கலீத் அகமட் 5 விக்கெட்டுகளை 106 ரன்களுக்கு வீழ்த்தினார். பயங்கர மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஒருவேளை வங்கதேசத்தை மழை காப்பாற்றலாம்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.