ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

திக் திக் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா

திக் திக் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மேத்தியு வேட்

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மேத்தியு வேட்

Aus vs WI | ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன் மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

  ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன் மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  இதன் முதல் டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள  ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

  இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி தரப்பில் மேயர் 39 ரன்களும், ஒடியன் ஸ்மித் 27 ரன்களை எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹாசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  இதையும் படிங்க: பலே திட்டங்களுடன் ஆஸ்திரேலிய செல்லும் இந்தியா: டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மாவின் சூப்பர் பிளான்!!..

  இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறினர், கேப்டன் ஆரோன் பின்ச் சற்று நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் இறங்கிய விக்கெட் கீப்பர் மேத்தியு வேட் 29 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றியை பாதைக்கு அழைத்து சென்றார்.

  இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 7விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து  3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் கொண்ட தொடரில் 1-0க்கு என்ற கணக்கில்  முன்னிலை பெற்றுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Australia, T20, West indies