Home /News /sports /

பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணி: 176 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்

பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணி: 176 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இதில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி பங்கேற்கும் 1000-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும். டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் ப்ராண்டன் கிங் களமிறங்கினர். ஹோப் 8 ரன்களில் சிராஜ் பந்திலும், ப்ராண்டன் கிங் 13 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்.

    அதனையடுத்து, களமிறங்கிய டேரென் ப்ராவோ, ஷாமார் ப்ரூக்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ப்ராவோ 18 ரன்கள் ப்ரூக்ஸ் 12 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 18 ரன்கள், கேப்டன் பொல்லார்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மட்டும் நிதானமாக 51 ரன்கள் எடுத்தார்.

    43.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டிஸ் அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: West indies, West Indies vs India

    அடுத்த செய்தி