WIvBAN | அதிரடியாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 321 ரன்கள் குவிப்பு

ICC World Cup | மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான கெய்ல், ரஷல் டக் அவுட்டாகியது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Web Desk | news18india
Updated: June 17, 2019, 7:16 PM IST
WIvBAN | அதிரடியாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 321 ரன்கள் குவிப்பு
WIvBAN
Web Desk | news18india
Updated: June 17, 2019, 7:16 PM IST
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 321 ரன்கள் குவித்தது.

உலகக்கோப்பை தொடரின் 23வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள், வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக கெயில், லூயிஸ்  களமிறங்கினர். அதிரடி ஆட்டக்காரர் கெய்ல், சைபதீன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹோப், லூயிஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லூயிஸ் 70 ரன்னிலும், ஹோப் 96 ரன்களிலும் அவுட்டாகினர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்ற வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுப்பட்டனர். ஷிம்ரான் ஹெட்மியர் 26 பந்துகளில் அரைசதம் விளாசி வங்கதேச பவுலர்களை திணறவிட்டார்.



மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான கெய்ல், ரஷல் டக் அவுட்டாகியது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.  மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வலுசேர்த்தனர். வங்கதேச அணி சார்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Also Watch

First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...