டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இன்று: ENGvsWI | இங்கிலாந்து அணி தடுமாற்றம்..

ENG vs WI

ENGvsW | முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இங்கிலாந்து அணியை வீழ்த்த மேற்கு இந்திய தீவுகள் அணி முனைப்பு காட்டி வருகிறது.

 • Share this:
  கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இங்கிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் இடையே மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

  இதன் முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்த நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி 318 ரன்களை எடுத்தது.

  போட்டியின் நாளாவது நாளான நேற்று, விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தொடர்ந்தது. சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டனர்.

  சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்தாலும், இங்கிலாந்து வீரர்கள் ரன்குவிப்பதில் ஆர்வம் காட்டினர். அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி 76 ரன்கள் சேர்த்தார்.

  டாம்சிப்ளி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். நடுவரிசை மற்றும் பின் வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர். இதனால் 4ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சாய்ந்தன. 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 284 ரன்களை எடுத்திருந்தது. இதன்மூலம், அந்த அணி 170 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

  மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஷனான் கேப்ரியல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ராஸ்டன் சேஸ், அலஜாரி ஜோசப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  மேலும் படிக்க...

  தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்

  கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் போட்டி டிராவை நோக்கி செல்லும். இங்கிலாந்தின் 2 விக்கெட்டுகள் சரிந்து 200 ரன்களுக்குள் இலக்கு இருக்கும்பட்சத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி எளிதில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: