• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மே.இ.தீவுகளுக்கு 12 புள்ளிகள், பாகிஸ்தான் சைபர்- கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி

மே.இ.தீவுகளுக்கு 12 புள்ளிகள், பாகிஸ்தான் சைபர்- கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி

கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பாக். அதிர்ச்சித் தோல்வி.

கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பாக். அதிர்ச்சித் தோல்வி.

ஜமைக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது.

  • Share this:
    ஜமைக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது.

    168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 151/9 என்று பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருந்த நிலையில் கிமார் ரோச் 30 நாட் அவுட் என்று வீரம் காட்ட அவருடன் 11ம் வீரர் ஜெய்டன் சீல்ஸ் 2 நாட் அவுட் என்று 13 பந்துகள் ஆட 168/9 என்று மே.இ.தீவுகள் அபார வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மே.இ.தீவுகள் 1-0 என்று முன்னிலை பெற்றது.

    இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெஸ்ட் இண்டீஸ் 12 புள்ளிகள் பெற பாகிஸ்தான் சைபர். ஆட்ட நாயகனாக மே.இ.தீவுகளின் ஜெய்டன் சீல்ஸ் தேர்வு செய்யப்பட்டார், இவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையும் படிங்க: புஜாராவின் ஒன்றுக்கும் உதவாத இன்னிங்ஸ்! - லார்ட்ஸ் ‘டெட்’ பிட்சிலும் சொதப்பிய ‘சூப்பர் ஸ்டார்’ இந்திய பேட்டிங்!

    முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, வெஸ்ட் இண்டீஸ் அணி பிராத்வெய்ட்டின் கேப்டன் இன்னிங்ஸ் 97 ரன்களினாலும் ஜேசன் ஹோல்டரின் அபாரமான58 ரன்களாலும் 253 என்று 36 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 3ம் நாள் முடிவில் 160/5 என்ற நிலையில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும் கிமார் ரோச் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய மே.இ.தீவுகள் ஷாஹின் ஷா அஃப்ரீடியிடம் மடிந்து 16/3 என்று தோல்வி முகம் காட்டியது, பிராத்வெய்ட், கிரன் போவெல், நிக்ருமா போனர் ஆகியோரை அப்ரீடி வீழ்த்தினார். பிறகு ராஸ்டன் சேஸ் (22), ஜெர்மைன் பிளாக்வுட் (55) இணைந்து 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மீண்டும் ஒரு சரிவு ஏற்பட்டு கைல் மேயர்ஸ் (0), ஜேசன் ஹோல்டர், ஜொஷுவா டாசில்வா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 142/8 என்று ஆனது. பிறகு ஜோமெல் வாரிகன் (6) ஹசன் அலியிடம் அவுட்ர் ஆகும் போது ஸ்கோர் 151/9 என்று ஆனது, ஆனால் கிமார் ரோச் 52 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, ஆட்ட நாயகன் ஜெய்டன் சீல்ஸ் 2 ரன்கள் எடுத்து உறுதுணையாக நிற்க 168/9 என்று நூலிழையில் மே.இ.தீவுகள் வெற்றி பெற்று 12 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்றது.

    பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் ஷா அப்ரீடி 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: