மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 213 ரன்கள் இலக்கு!

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிகள் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.

Web Desk | news18
Updated: June 14, 2019, 6:48 PM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி வெற்றி பெற 213 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படும் முனைப்பில் இரு அணிகளும் மோதின.

இங்கிலாந்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் அணியில் மாற்றம் ஏதும் இல்லை. மேற்கிந்திய தீவுகள் அணியில் 3 மாற்றங்கள் உள்ளன.

ரஸ்ஸல், எவின் லெவிஸ், மற்றும் சான்னன் கேப்ரியல் இடம் பெற்றுள்ளனர். சான்னன் கேப்ரியலுக்கு இது முதல் போட்டி என அந்த அணியின் கேப்டன் ஜஸன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிகள் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.

பின்பு, நிதானமாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, விக்கெட்டுகளை ஆங்காங்கே பறிகொடுத்தாலும் இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
Loading...
Also watch: நயன்தாரா, அனுஷ்கா காணாமல் போனால்தான் உடனடி நடவடிக்கையா?- உயர்நீதிமன்றம் கேள்வி

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...