85 வயதில் ஓய்வு அறிவித்த வேகப்பந்து வீச்சாளர்!

செசில் 60 ஆண்டுகள் 20 லட்சம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 7000 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

Web Desk | news18-tamil
Updated: August 28, 2019, 2:44 PM IST
85 வயதில் ஓய்வு அறிவித்த வேகப்பந்து வீச்சாளர்!
செசில் ரைட்
Web Desk | news18-tamil
Updated: August 28, 2019, 2:44 PM IST
அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் செசில் ரைட் அறிவித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவருடைய வயது 85.

செசில் ரைட் இரண்டு வாரத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறஉள்ளதாக அறிவித்துள்ளார்.


மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிசர்ட்ஸ், கேரி சோபர்ஸ் போன்றவர்களின் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் என்ற பெருமையை செசில் பெற்றுள்ளார்.

பார்படோஸ் அணிக்கு எதிராக ஜமைக்கா அணியில் முதன்முதலாக களமிறங்கினார். விவியன் ரிசட்ர்ஸ் விளையாடிய அணியில் இவர் இடம்பெற்றிருக்கிறார். செசில் 60 ஆண்டுகள் 20 லட்சம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 7000 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக விளையாடி வருபவர் செசில், அவரது மனஉறுதியும், உடல்திறனும் மற்ற வீரர்களுக்கு முன்உதாரணமாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் பலர் செசிலின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Loading...

Also Watch

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...