இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பநந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 39 வது லீக் ஆட்டத்தில் இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகிறது. ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
ஏற்கனவே அரையிறுதி போட்டி வாய்பை இழந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுவதற்காக களம்காண்கிறது.
இரண்டு முறை உலகக் கோப்பையை முத்தமிட்ட மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை லீக் சுற்றோடு வெளியேறுவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணியை பொருத்தவரை ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணியும் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து ஆறுதல் வெற்றிக்காக விளையாடி வருகிறது.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.