ஜோ ரூட்டை ஓரினச்சேர்க்கையாளர் என திட்டிய வெ.இண்டீஸ் வீரர்: கடுமையாக எச்சரித்த அம்பயர்!

West Indies cricketer #ShannonGabriel warned for using offensive language | இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி செயிண்ட்.லூசியா நகரில் நடைபெற்று வருகிறது.

news18
Updated: February 12, 2019, 4:37 PM IST
ஜோ ரூட்டை ஓரினச்சேர்க்கையாளர் என திட்டிய வெ.இண்டீஸ் வீரர்: கடுமையாக எச்சரித்த அம்பயர்!
டெஸ்ட் போட்டியில் மோதல். (Twitter)
news18
Updated: February 12, 2019, 4:37 PM IST
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டைப் பார்த்து ஓரினச்சேர்க்கையாளர் என திட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரரை அம்பயர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் அவ்வப்போது வார்த்தை மோதல்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், வார்த்தைகள் எல்லை மீறும்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாயோவைப் பார்த்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது நிறவெறி வசைபாடியதால், அவருக்கு ஐசிசி 4 போட்டிகளில் தடைவிதித்து நடவடிக்கை எடுத்தது.

Shannon Gabriel, ஷானோன் கேப்ரியல்
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷானோன் கேப்ரியல். (Twitter)


இந்நிலையில், இதேபோன்ற மேலும் ஒரு சம்பவம் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியின்போது நிகழ்ந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 விதமான போட்டிகளில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி செயிண்ட்.லூசியா நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் இடையே ரன் எடுக்க ஓடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டைப் பார்த்து, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷானோன் கேப்ரியல் விமர்சித்துள்ளார். அதற்கு “இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்த வேண்டாம். ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் தவறில்லை” என ஜோ ரூட் கூறியுள்ள ஆடியோ மட்டும் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. ஆனால், கேப்ரியல் என்ன விமர்சித்தார் என அதில் பதிவாகவில்லை.

Shannon Gabriel, ஷானோன் கேப்ரியல்
வெஸ்ட் இண்டீஸ் அணி. (Twitter)


இதுபற்றி ஜோ ரூட் கள அம்பயரிடம் புகார் தெரிவித்தார். உடனே ஷானோன் கேப்ரியலை அழைத்த அம்பயர், இதுபோன்ற தகாத வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

Video: காலில் விழுந்த ரசிகர்... தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த தோனி..!

Also Watch..

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...