ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மே.இ.தீவுகளின் டேரன் சமிக்கு பாகிஸ்தானின் உயரிய விருது

மே.இ.தீவுகளின் டேரன் சமிக்கு பாகிஸ்தானின் உயரிய விருது

டேரன் சமிக்கு பாகிஸ்தானின் உயரிய விருது

டேரன் சமிக்கு பாகிஸ்தானின் உயரிய விருது

 • Cricketnext
 • 1 minute read
 • Last Updated :

  பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் கொண்டு வந்ததற்காக பாகிஸ்தானின் 3வது உயரிய சிவிலியன் விருதான சிதரா பாகிஸ்தான் விருதை மே.இ.தீவுகள் முன்னாள் கேப்டன் டேரன் சமி பெற்றார். சாமி இந்த விருதை திங்களன்று பெற்றார், இதன் புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் டேரன் சமி.

  பாகிஸ்தான் சூப்பர் லீகில் ஆடிய ஒருசில சொற்ப வெளிநாட்டு வீரர்களில் டேரன் சமியும் ஒருவர். 2009-ல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பிறகே பாதுகாப்புப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் பயணிக்கவில்லை.

  இப்போதுதான் இலங்கையும், ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானுக்குப் பயணித்தன. இருமுறை டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டனான டேரன் சமி, 2016 முதல் 2020 வரை பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் பெஷாவர் ஜால்மி அணிக்கு ஆடினார்.

  டேரன் சமியின் ட்வீட்:

  வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 3 வடிவங்களிலும் ஆடியுள்ளார் டேரன் சமி. 30 டெஸ்ட் போட்டிகளில் 1323 ரன்களையும் 84 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் சமி. இதில் ஒரு சதம் 5 அரைசதங்கள். 126 ஒருநாள் போட்டிகளில் 1871 ரன்களையும் 81 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Pakistan cricket, West indies