T20 World Cup 2021: ஓய்வு பெறுகிறார் ட்வைன் பிராவோ
T20 World Cup 2021: ஓய்வு பெறுகிறார் ட்வைன் பிராவோ
ஓய்வு பெறுகிறார் ட்வைன் பிராவோ
2008-ல் பிறந்த டி20 வடிவத்தில் குறுகிய காலத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தியதும் கவனிக்கத்தக்கது. விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் அவர்களுக்கான வம்சாவழியை விட்டுச் சென்றுள்ளனர், கிளைவ் லாய்ட் மிக முக்கியம், ஆனால் நாமும் நமக்கான வம்சாவழியை உருவாக்கிவிட்டுத்தான் செல்கிறோம்.
நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ அறிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக அபுதாபியில் தோற்று 2021, டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய பிறகே ட்வைன் பிராவோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“வேளை வந்து விட்டது என்று கருதுகிறேன். நல்ல கரியர் அமைந்தது. மே.இ.தீவுகள் அணிக்காக 18 ஆண்டுகள் ஆடியுள்ளேன். நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும். ஆனால் திரும்பிப் பார்க்கையில் என் பிராந்தியத்தையும் கரீபிய மக்களுக்காகவும் நான் பிரதிநிதித்துவம் செய்வதில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.
மூன்று ஐசிசி டிராபிக்களை வென்றதி பங்களித்தது மிக முக்கியம் அதில் 2 டிராபி டேரன் சமியின் கேப்டன்சியில் சாதித்தோம். எங்கள் கால கிரிக்கெட் குறித்து நான் பெருமை அடைவதெல்லாம் நாங்கள் உலக அரங்கில் எங்களுக்கென்று தனித்த முத்திரையைப் பதித்ததே.” என்றார்.
34 வயதாகும் பிராவோ ஏப்ரல் 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் முதன் முதலில் இறங்கினார். முதல் டெஸ்ட்டையும் அதே ஆண்டில் ஆடினார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு டி20-யில் அறிமுகமானார். இந்த வடிவம்தான் பிராவோவின் பெயரை உலக அரங்கில் உயர்த்தியது.
மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி இரண்டிலும் சேர்த்து 3,188 ரன்களையும், 285 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 90 டி20 சர்வதேசப் போட்டிகளில் 78 விக்கெட்டுகளையும் 1245 ரன்களையும் எடுத்தார் டிவைன் பிராவோ. 2012 மற்றும் 2016-ல் டி20 உலகக்கோப்பையை மே.இ.தீவுகள் வென்றதில் பிராவோ பிரமாதமாக ஆடினார். முதன் முதலில் டிராபியை வென்ற போது வின்னிங் கேட்சை எடுத்தவர் பிராவோ.
இதோடு 2004-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெஸ்ட் இண்டீஸ் வென்ற போதும் டிவைன் பிராவோ அந்த அணியில் இருந்தார். இந்த உலகக்கோப்பை டி20 பற்றி பிராவோ வருத்தம் தெரிவிக்கையில், “நாங்கள் எதிர்பார்த்த டி20 உலகக்கோப்பை அல்ல அது. நாங்கள் எங்கள் மேலேயே வருத்தம் கொண்டும் பிரயோசனமில்லை, ஏனெனில் இது கடினமானது. நாங்கள் தலை நிமிர்ந்து செல்லவே ஆசைப்படுகிறோம்.
எங்கள் அடையாளத்தை நாங்கள் தக்க வைக்க வேண்டும் முன்னாள் லெஜண்ட்களின் நிழல்களில் நாங்கள் அண்டக்கூடாது. 70, 80,90களில் எங்கள் முன்னோர் வீரர்கள் செய்தது அபரிமிதமானது, பெரிய விஷயம்தான் அதை ஒப்புக் கொள்கிறேன். அவர்கள்தான் எங்களுக்கு கிரிக்கெட் ஆடவே தூண்டுகோலாக இருந்தவர்கள்.
ஆனால் 2008-ல் பிறந்த டி20 வடிவத்தில் குறுகிய காலத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தியதும் கவனிக்கத்தக்கது. விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் அவர்களுக்கான வம்சாவழியை விட்டுச் சென்றுள்ளனர், கிளைவ் லாய்ட் மிக முக்கியம், ஆனால் நாமும் நமக்கான வம்சாவழியை உருவாக்கிவிட்டுத்தான் செல்கிறோம். மக்களுக்கு இந்த வடிவம் மீது பெரிய மரியாதை இருக்காது என்றாலும் இது ஐசிசி தொடர் எனவே இதில் நாங்கள் சாதித்ததும் பெருமைக்குரியதே” என்றார் ட்வைன் பிராவோ
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.