இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் தடுமாற்றம்

ENGvsWI

England vs West Indies | கடைசி டெஸ்டில் வெற்றி பெரும் அணியே தொடரை வெல்லும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக செல்கிறது.

 • Share this:
  இங்கிலாந்து-மேற்கிந்தியத்தீவுகள் மோதி வரும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறி வருகின்றனர்.

  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது போட்டி ஸ்டிரெட்போர்ட் மைதாதனத்தில் வெள்ளியன்று தொடங்கியது.

  டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்சில் இங்கிலாந்து 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.

  2ம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்கள் 6 பேர் ஆட்டமிழந்திருந்தனர். 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்தின் ஸ்கோரை விட 232 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்க்சில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இன்னும் 3 நாட்கள் எஞ்சியிருப்பதால் போட்டியின் வெற்றியை கணிக்க முடியாத சூழல் உள்ளது.

  மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஜான் கேம்ப்பெல் மட்டுமே அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூரூவர்ட் பிராட் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: