முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20 போட்டியை மிஞ்சிய பரபரப்பு… டெஸ்டில் 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து அணி

டி20 போட்டியை மிஞ்சிய பரபரப்பு… டெஸ்டில் 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து அணி

வெற்றிபெற்ற உற்சாகத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள்

வெற்றிபெற்ற உற்சாகத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள்

ஜோ ரூட் மட்டும் அதிரடியாக விளையாடி, நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருந்தார். 113 பந்துகளில் அவர் 95 ரன்கள் எடுத்து மிரட்டினார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெலிங்டனில் நடைபெற்ற இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது. டி20 போட்டியை விடவும் இந்த டெஸ்டின் 5 ஆவது நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியுசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் 435 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்த நிலையில், நியூசிலாந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. 2 ஆவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 483 ரன்கள் குவித்ததை தொடர்ந்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என, இங்கிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து மேலும் 210 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. இருப்பினும் சீரான இடைவெளியில் நியூசிலாந்து பவுலர்கள் விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டே இருந்தனர். ஜோ ரூட் மட்டும் அதிரடியாக விளையாடி, நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருந்தார். 113 பந்துகளில் அவர் 95 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவருக்கு உறுதுணையாக 116 பந்துகளில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிகவும் நிதானமாக விளையாடி 33 ரன்கள் எடுத்தார். இருப்பினும் 74.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Cricket