அபிநந்தனை வரவேற்று சானியா மிர்சா ட்வீட்: சோயப் மாலிக் ட்வீட்டால் நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!

#WelcomBackAbhinandan #SaniaMirza and #ShoaibMalik Tweets Goes Viral | இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனை வரவேற்று சானியா ட்வீட் செய்திருந்தார்.

அபிநந்தனை வரவேற்று சானியா மிர்சா ட்வீட்: சோயப் மாலிக் ட்வீட்டால் நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!
சானியா மிர்சா ட்வீட்
  • News18
  • Last Updated: March 1, 2019, 9:48 PM IST
  • Share this:
இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனை வரவேற்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதிவிட்ட ட்வீட்டிற்கு அவரது கணவர் சோயப் மாலிக் போட்ட ட்வீட்டால் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், தொடர்ந்து இந்தியா சார்பிலேயே சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

Sania Mirza, Shoaib Malik, சானியா மிர்சா, சோயப் மாலிக்
சானியா மிர்சா மற்றும் அவரது கணவர் சோயப் மாலிக். (Reuters)சானியா மிர்சாவின் திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்படும் போதெல்லாம் அவர் பதிவிடும் ட்வீட்டால் சர்ச்சைகள் கிளம்புகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து சானியா மிர்சா, எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இதற்குப் பதிலடியாக அவர் நீண்ட விளக்கத்தை அளித்திருந்தார். அதில், “பிரபலங்கள் என்றாலே தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்று கோபமாக கூறியிருந்தார். இதற்கும் பல்வேறு விமர்சனங்கள் வந்தன.இந்நிலையில், இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனை வரவேற்று சானியா ட்வீட் செய்திருந்தார். அதில், “விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். எங்களின் உண்மையான ஹீரோவாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் காட்டிய துணிவு மற்றும் கண்ணியத்திற்கு இந்த நாடே உங்களை வணங்குகிறது” என்று கூறியிருந்தார்.உடனே நெட்டிசன்கள், இந்திய விமானப்படை அதிகாரியை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தபோது, உங்களது கணவர் சோயப் மாலிக் என்ன பதிவிட்டார் தெரியுமா? என அவரின் ட்வீட்டை பதிவிட்டுள்ளனர்.உங்களது தைரியத்துக்கு தலை வணங்குகிறேன்: அபிநந்தனை உருக்கமாக வரவேற்ற சேவாக்!

ஆஸி.க்கு பதிலடி கொடுக்க இந்திய அணியில் முக்கிய மாற்றம்!

அபிநந்தனைப் போன்ற மிகப்பெரிய ஹூரோவை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை: அஸ்வின்!

Also Watch...

First published: March 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading