• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 WC-இந்தியாவை தோற்கடிப்போம்- பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் சூளுரை

T20 WC-இந்தியாவை தோற்கடிப்போம்- பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் சூளுரை

பாபர் அசாம்.

பாபர் அசாம்.

டி20 உலகக்கோப்பையில் அக்டோபர் 24ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்த்தன. இந்நிலையில் இந்தியாவை அன்றைய தினம் வீழ்த்துவோம் என்கிறார் பாபர் ஆசம்.

  • Share this:
    யுஏஇயில் பாகிஸ்தான் ஆடி அனுபவம் பெற்றுள்ளது என்கிறார் பாபர் ஆசம், ஆனால் அதைவிடவும் 2 ஐபிஎல் தொடர்களாக இந்திய அணியினரும் அங்குள்ள வெயில் உள்ளிட்ட சூழல், பிட்ச்கள் என்று அனைத்தையும் பிடித்து வைத்துள்ளனர். விரல் நுனியில் வைத்துள்ளனர். 50 ஓவர் உலகக்கோப்பை டி20 உலகக்கோப்பை இரண்டிலுமே பாகிஸ்தான் இந்தியாவை வென்றதில்லை, விராட் கோலி படை இந்த முறையும் இதைத் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

    பாபர் ஆசம் கூறும்போது, “நாங்கள் யுஏஇயில் 3-4 ஆண்டுகளாக ஆடி வருகிறோம். அங்குள்ள நிலைமைகள் எங்களுக்கு அத்துப்படி. அன்றைய தினத்தில் பெட்டர் கிரிக்கெட்டை ஆடும் அணி வெல்லும் என்னைக் கேட்டால் நாங்கள் வெல்வோம். ஒரு அணியாக எங்கள் உற்சாகம் மற்றும் நம்பிக்கை உச்சத்தில் இருக்கிறது.

    நாங்கள் கடந்த காலத்தைப் பார்க்கவில்லை எதிர்காலத்தை நோக்குகிறோம். அதற்குத் தயாராக இருக்கிறோம். நாங்கள் நன்றாகத் தயாரித்திருப்பதால் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். அன்றைய தினம் சீரிய கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அனைத்து வீரர்களும் அணியில் நல்ல உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடிவிட்டு அணிக்கு வந்துள்ளனர். இதற்கு முன்னர் உலககோப்பையிலும் லீகிலும் ஆடியுள்ளனர்.

    7-8 வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியையும் ஆடியுள்ளோம் எனவே நம்பிக்கை உச்சத்தில் இருக்கிறது. ஹெய்டனும் பிலாண்டரும் நிறைய அனுபவங்களைக் கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து போதுமானதை விரைவில் கற்றுக் கொள்வோம், பிலாண்டர் ஏற்கெனவே பவுலர்களுடன் பணியாற்றி கொண்டிருக்கிறார். பவுலர்கள்தான் தொடரை வெல்வார்கள். சாம்பியன்ஸ் டிராபியில் ஹசன் அலி எங்கள் சிறந்த பவுலராக இருந்தார். மற்றவர்களையும் அவர் தன் வழியில் இட்டுச் செல்வார்.” என்றார் பாபர் ஆசம்.

    இந்தியா நிச்சயம் நன்றாகத் தயாரித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் துபாயில் கே.எல்.ராகுல் தவிர மற்ற முன்னிலை இந்திய பேட்ஸ்மென்கள் ஐபிஎல் தொடரில் சரியாக ஆடவில்லை என்பதே உண்மை, அணியில் இல்லாத வீரர்கள் பிரமாதமாக ஆடியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: