Home /News /sports /

’வீ மிஸ் யூ ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்’ - ஒரு மணல் சிற்பக் கலைஞனின் அஞ்சலி

’வீ மிஸ் யூ ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்’ - ஒரு மணல் சிற்பக் கலைஞனின் அஞ்சலி

சுதர்சன் பட்நாயக்கின் மணற்சிற்பம்

சுதர்சன் பட்நாயக்கின் மணற்சிற்பம்

சனிக்கிழமை இரவு கார் விபத்தில் மரணமடைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தினார்.

    சனிக்கிழமை இரவு கார் விபத்தில் மரணமடைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தினார். மணல் கலைக்கு புகழ் பெற்ற பட்நாயக், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் சைமண்ட்ஸின் மணல் சிற்பத்தை உருவாக்கினார். மணல் சிற்பத்தில் "நாங்கள் உங்களை இழந்து நிற்கிறோம்”... ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு அஞ்சலிகள்" என்ற வாசகத்தைச் சேர்த்துள்ளார்.

    பட்நாயக் பூரி கடற்கரையில் செய்யப்பட்ட மணல் கலையின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்."இது கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு" என்று பட்னாயக் வருந்தியுள்ளார்.



    கடந்த சனிக்கிழமையன்று இரவு 10:30 மணியளவில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள டவுன்ஸ்வில்லே பகுதியில் 46 வயதான, ஆஸி.யின் முன்னாள் ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸின் கார் சாலையிலிருந்து விலகி பல்டி அடித்து உருண்டது. இதில் சைமண்ட்ஸ் மரணமடைந்தார்.

     

    இங்கிலாந்தில் பிறந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக காலேயில் நடந்த ஆட்டத்தில் டெஸ்ட்டில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில், அவர் 26 போட்டிகளில் விளையாடி 40.61 சராசரியில் 1462 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 10 அரை சதங்கள் அடங்கும்.

     

    ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், அவர் தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்காக 1998-ல் பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் விளையாடினார். ஒட்டுமொத்தமாக, அவர் இந்த வடிவத்தில் 198 முறை ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5088 ரன்கள் குவித்து 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சைமண்ட்ஸ் ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 30 அரை சதங்கள் அடித்துள்ளார்.

     

    விளையாட்டின் மிக குறுகிய டி20 வடிவத்தில், சைமண்ட்ஸ் நியூசிலாந்துக்கு எதிராக 2005-ல் ஆக்லாந்தில் தனது முதல் சர்வதேசப் போட்டியை விளையாடினார். ஒட்டுமொத்தமாக, அவர் 14 டி20 போட்டிகளில் 337 ரன்கள் எடுத்தார், எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். டி20யில் சைமண்ட்ஸ் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Andrew Symonds

    அடுத்த செய்தி