Home /News /sports /

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் - விராட் கோலி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் - விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

  • News18
  • Last Updated :
    இந்தியா-வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி 20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்தோரில் நடைபெற உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு டி 20 தொடரில் ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இந்திய அணியை வழிநடத்துகிறார்.

    டி20 தொடரை வென்றது போல டெஸ்ட் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விரு அணிகளும் இதுவரை 9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 7 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. டி 20 போட்டியில் வங்கதேசம் அணி முதல் வெற்றியை பதிவு செய்ததை போல டெஸ்ட்டிலும் முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்நிலையில், இந்தூர் மைதான அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, கிரிக்கெட்டில் எந்தவொரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிக்காக போராட வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

    மேலும், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் மனஅழுத்தம் காரணமாக சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி, 2014-ல் இங்கிலாந்து பயணத்தில் இதுபோன்ற அழுத்தத்திற்கு நானும் ஆளானேன். அத்துடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையே அழிந்து விட்டதாக உணர்ந்தேன். மேக்ஸ்வெல் முடிவு கிரிக்கெட் உலகில் சிறந்த உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலி தெரிவித்தார்.
    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Virat Kohli

    அடுத்த செய்தி