தோனியை தீவிரவாதி என்று தான் அழைப்போம் - சொன்னது யார்?

உலகக்கோப்பை தொடர் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. ஜூன் மாதம் 6-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

தோனியை தீவிரவாதி என்று தான் அழைப்போம் - சொன்னது யார்?
தோனி
  • News18
  • Last Updated: May 18, 2019, 10:15 AM IST
  • Share this:
தோனியை நாங்கள் தீவிரவாதி என்று தான் அழைப்போம் என்று தோனியின் நண்பர் சத்ய பிரகாஷ் கூறியுள்ளார்.

இந்திய அணி வீரர் தோனி தனது நண்பர்களுடன் நேரம் செலவிடுவது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் பீகார் அணியில் விளையாடிய போது அவருடன் விளையாடிய வீரர்கள் தான் அவருடைய நெறுங்கிய நண்பர்கள்.

தோனியின் நெறுங்கிய நண்பரும், பிகார் அணியில் விளையாடியவருமான சத்ய பிரகாஷ் கேப்டன் கூல் தோனி பற்றி பேசியுள்ளார். அவர் ‘ தோனியை நாங்கள் தீவிரவாதி என்று தான் அழைப்போம். தோனி 20 பந்துகளில் 40 முதல் 50 ரன்களை அடிப்பார். ஆனால் இந்திய அணிக்காக விளையாடும் போது சற்று நிதானமாக விளையாடுகிறார் என்று கூறியுள்ளார்.


மேலும் பீகார் அணியில் விளையாடும் போது தோனி எப்போதாவது தான் கேப்டனாக பொறுப்பேற்பார். ஆனால் இந்திய அணியின் கேட்பனாக மாறி உள்ளார். அவர் எப்போதும் இந்தியில் தான் பேசுவார். ஆனால் இப்போது ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார் என்று சத்ய பிரகாஷ் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடர் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 6-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

Also watch
First published: May 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading