HOME»NEWS»SPORTS»cricket we treated it as 3 match series after adelaide defeat won it 2 0 says hanuma vihari mut

அடிலெய்ட் தோல்விக்குப் பிறகே 2-0 என்று ஆஸி.யை வீழ்த்தியுள்ளோம்: ஏ-அணி போன்ற கருத்துகளுக்கு ஹனுமா விஹாரி பதிலடி

சிட்னி டெஸ்ட் போட்டியில் காலை நகர்த்த முடியாத நிலையிலும் அஸ்வினுடன் நின்று 259 பந்துகளைச் சந்தித்து டெஸ்ட்டை டிரா செய்ததால் தற்போது இந்தியா பிரிஸ்பனில் வென்று தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

அடிலெய்ட் தோல்விக்குப் பிறகே 2-0 என்று ஆஸி.யை வீழ்த்தியுள்ளோம்: ஏ-அணி போன்ற கருத்துகளுக்கு ஹனுமா விஹாரி பதிலடி
இந்திய அணி.
  • Share this:

இந்திய அணியிடம் தோற்றோம் என்பதை ஒப்புக் கொள்ள மனம் வராமல் இந்திய ஏ அணியிடம் தோல்வி அடைந்தோம் என்றெல்லாம் இந்திய வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கதறுகின்றனர். இதற்குப் பதிலடி தரும் விதமாக ஹனுமா விஹாரி ஸ்போர்ட்ஸ் டுடேவில் பிரமாதமாகத் தெரிவித்துள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் காலை நகர்த்த முடியாத நிலையிலும் அஸ்வினுடன் நின்று 259 பந்துகளைச் சந்தித்து டெஸ்ட்டை டிரா செய்ததால் தற்போது இந்தியா பிரிஸ்பனில் வென்று தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

இவரும் அஸ்வினும், தமிழில் உரையாடியதும் பெரிய அளவில் சமூக ஊடகங்களில் வைரலானது. ‘பத்து பத்து பாலா ஆடினா 40 பந்துதான்,, ஆடு” என்று அஸ்வின் அன்று களத்தில் கூறியது சிட்னியையும் தாண்டி இந்தியா நெடுகிலும் எதிரொலித்தது.



இந்நிலையில் ஹனுமா விஹாரி கூறியதாவது:

அடிலெய்ட் பின்னடைவுக்குப் பிறகு ஏமாற்றமடைந்து, மீட்டிங் போட்டு, உணர்ச்சியாகப் பேசி ஒருவரையொருவர் சாடிக்கொண்டு இருப்பது சுலபம், ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை. நாங்கள் ஒற்றுமையுடன் அவதானித்தோம். அதைப்பற்றியே பேசவில்லை. அது ஒரு எதேச்சையான தருணம், பட்டதெல்லாம் எட்ஜ், எட்ஜ் ஆனதெல்லாம் கையில் போய் உட்கார்ந்தது, இப்படி இனி நடக்காது என்றே நாங்கள் பேசிக்கொண்டோம்.

அதன் பிறகே அடிலெய்டை மறப்போம், மீதமிருப்பது 3 டெஸ்ட்கள், இனி இது நமக்கு 3 மேட்ச் தொடர், எனவே இதை வெற்றி பெறுவோம் என்று உறுதிபூண்டோம்.

இப்போது உண்மையில் நாங்கள் 3 மேட்ச் சீரிசை நாங்கள் 2-0 என்று கைப்பற்றியுள்ளோம். இந்த பாசிட்டிவ் திங்க்கிங் தான் எங்களுக்கு ஓய்வறையில் கைகொடுத்தது. பேட்டிங் யூனிட்டாக நாங்கள் எங்கள் மீது எந்த ஒரு சந்தேகமும் கொள்ளவில்லை. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பனில் ஆடிய ஆட்டம் நம் அணியின் உண்மையான தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

முதல் டெஸ்ட்டில் தோற்ற போது ரவிசாஸ்திரி கூறினார், 2 நாட்கள் ஆதிக்கம் செலுத்தினோம், ஒரு செஷனில் விட்டோம், கவலையில்லை, பாசிட்டிவ்வாக ஆடுவோம் என்றார், சாஸ்திரி எப்போதும் பாசிட்டிவ்தான். ரஹானேவின் அமைதியும் நிதானமும் அணி வீரர்களிடத்தில் மாறியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்சியில் 100% ரெக்கார்ட் வைத்துள்ளார், ரஹானேவுக்கு என் வாழ்த்துக்கள்.

இவ்வாறு கூறினார் ஹனுமா விஹாரி.
Published by:Muthukumar
First published: